அண்ணலார் (ஸல்) பற்றி மாற்றுமத அறிஙர்கள்

வெற்றி வீரர்:
உலகின் மிகச் செல்வாக்கு வாய்ந்த மனிதர்களின் பட்டியலில் முதலிடம் வகிப்பவராக நான் முகம்மத் (ஸல்) அவர்களை தேர்ந்தெடுத்திருப்பது வாசகர்கள் சிலருக்கு வியப்பை அளிகலாம். சிலர் கேள்விக்குரியதாகவும் கருதலாம். ஆனால் முகம்மத் (ஸல்) அவர்கள்தான் உலக வரலாற்றிலேயே சமயத்துறை,உலகியல்துறை இரண்டிலும் வெற்றிகரமானவராகத் நிகழ்ந்த மாமனிதர்
-Michael H.Hart. the 100: A Ranking Of The Most Influntial Persons In History, New York: Hart Publishing Company.inc 1978, p , 33


மனிதான புனிதர்:-
நான் ஒரே இறைவனின் மீது நம்பிக்கை கொள்கின்ரேன்; முகம்மத் (ஸல்) அவர்கள் இறைவனின் திருத்தூதராவார்கள் என்பதுதான் இஸ்லாத்தின் ஒரேவிதமான பறைசாற்றலாகும் . ஒருபுறம் கடவுள் பற்றிய அறிவாந்த கருத்தின் மதிப்பு, கண்ணுக்குப் புலப்படும் உயிரினங்கள், சிலைகள் மற்றும் பொருள்களின் அளவுக்கு குறைக்கபட்டதில்லை. இறைத்தூதற்க்கு அளிக்கபட்ட உயர்மதிப்புகள் மனிதர் என்ற அந்தஸ்தைத் தான்டி (கடவுள் என்கின்ற அளவுக்கு) உயர்த்தியதில்லை. அவர் அளித்துவிட்டுச் சென்ற சிரங்சீவியான கட்டளைகள் அவரைப் பின்பற்றுபவற்கள் அவருக்கு காட்டும் நன்றியுணர்வை பகுத்தறிவு மற்றும் சமயத்தின் எல்லைகளுக்குள் கட்டுபடுத்தி (மிகைப்படித்த விடாமல் தடுத்து) வைத்திருக்கின்றன
-Edward Gibbon and Simon Oclay, Histroy Of The Saracen Empire , London 1870, p ,54


மனிதகுலத்தின் மாபெரும் பாதுகாவலர்!
முகம்மத் (ஸல்) உடைய மார்க்கம் குறித்து நான் மிக உயர்ந்த எண்ணமும் உன்னத மதிப்பும் கொன்டிருக்கக் காரனம் வீரியமிக்க அதன் உயிர்த்துடிப்பான அம்சங்ளே!
மனிதகுலத்தின் மாபெரும் பாதுகாவலர்!
முகம்மத் (ஸல்) உடைய மார்க்கம் குறித்து நான் மிக உயர்ந்த எண்ணமும் உன்னத மதிப்பும் கொன்டிருக்கக் காரனம் வீரியமிக்க அதன் உயிர்த்துடிப்பான அம்சங்ளே! நான் அவரைக் குறித்து ஆய்வு செய்ததிலிருந்து அவர் மனித இனத்தின் மாபெரும் பாதுகாவலர் என்று அழைக்கப்பட வேண்டும் என்பதே எனது கருத்து,முகம்மத் (ஸல்)அவர்களுடைய நம்பிக்கை இன்றைய ஜரோப்பியா ஏற்றுக்கொன்டு வருவது போல் நாளைய ஜரோப்பாவும் எற்கும் என்பதை இப்போதே முன்னறிக்கின்றேன்
-Sir George Bernard Shaw "in the Genuine Islam" Vol . 1, No 8. 1936


ஆச்சர்ய ஆசான்!
தனிப்பட்ட ஒரு மனிதர் பாலதரப்பட்ட குலகோத்திரத்தையும் நாடேடிகளாய்த் திரிந்த நாட்டுப்புற்த்தவரையும் வெறும் பத்து ஆண்டுகளில் ஆற்றல் மிக்க நாகரிகப் பண்பாட்ச் செழுமை வய்ந்த ஒரே தேச குடையின் கீழ் கொண்டு வந்திருப்பது என்னே ஆச்சர்யம்!
-Thomas Carlyle in his Heroes and Hero Worship.


உயர் எண்ணங்களுக்கு உகந்தவர்!
அரேபியாவின் இந்த தூதருடைய வாழ்க்கையும் ஒழுக்கப் பண்புகளையும் தூயநடத்தையும் படிப்பவர்களுக்கு, அவர் எப்படி வாழ்ந்தார் என்பதை அறிந்தவர்களுக்கு, அந்த வல்லமை மிக்க மாபெரும் இரைதூதர்களில் ஒருவரான இறுதிதூதரைக் குறித்து உயர்வான என்னமே ஏற்படும். நானே அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றைத் திரும்பத் திரும்பப் படிக்கும் ஒவ்வெறு முறையும் ஆற்றல் மிக்க அந்த அரபு போதகரின் மீது புதிய ஒரு மதிப்பும் புதிய ஒரு மரியாதை உனர்வும் ஏற்படுவதை நான் உணர்கின்றேன்!
-Dr. Annie Besant, The life and Teachaings of Muhammed 1932, p. 4


வாள்பலம் அல்ல வக்காலத்து!
நபிகள் நாயகத்தின் மாறாத எளிமை, தம்மை பெரிதாகக் கருதாமல் சாதாரணமானவராக நடந்துகொள்ளும் உயர் பன்பு, எந்நிலையிலும் வாக்குறுதியைப் பேணிகத்தா தன்மை,தம் தோழர்கள் மீது அவர் கொன்டிருந்த அழிய அன்பு அவரது வெற்றிக்குக் காரனங்கள், இவையே உலக சக்திகள் அனைத்தையும் நபிகள் நாயகத்தின் முன்பும் அவர்கள் தோழர்கள் முன்பும் கொன்டு வந்து குவித்தன. எல்லாத் தடைகளையும் வெற்றிககொண்டன. அவரது மகத்தான வெற்றிக்கு இவைதாம் காரணமே தவிர வாள்பலம் அல்ல!
-Mahathma Gandhi, young India , Quoted in the Light, Lahore for 18th September 1924.

Source from vasantham tamil Monthly

-Diary