கல்யாணமாம் கல்யாணம்



கல்யாணமாம் கல்யாணம் மே ,ஜூன் , ஜூலை மாதங்களில் அதிரையில் அனைவரும் பேசிகொல்லுவது கல்யாணத்தை பற்றியே , இந்த வருட சீசனில் நுறு திருமனங்கள அல்லது நுற்றி ஐம்பது திருமனங்கள ௦௦ என்ற விவாதம் ஒருபக்கம் இருக்க, படித்தவன்,படிக்காதவன்,ஏழை,பணக்காரன் ,உள்நாட்டு வேலையுள்ளவன் ,வெளி நாட்டு வேலையுள்ளவனுகும் எந்தந்த மாதிரியான வரதட்சணை வாங்க வேண்டும் அவர்கள் தகுதிக்கு ஏற்றவாறு விளை பட்டியல் நம் குல பெண்களால் ஒரு பக்கம் வெளியிட படும்

மணமகளுக்கும் ஒரு பட்டியல் தயாரிக்கப்படும் அது ஒரே ஒரு கண்டிசன் வீடு உள்ளவல அல்லது பாதி  வீடு உள்ளவல அல்லது ஒன்றுமே இல்லதாவல ,இப்படியாக தரம் பிரிக்கப்பட்டு , பால் ,பழம்,ஹல்வா வங்கி கொண்டு நிச்சயம் செய்யப்படும், இரண்டு லட்சம் முதல் பத்து லட்சம் வரை ஹாட்  காஷ் ,இருவது ௦ லட்சம் முதல் ஐம்பது லட்சம் வரை ஒரு வீடு ,மிண்டும் ஒரு லட்சம் ஹாட்  காஷ் இதற்க்கு சீர் பணம் என்று சொல்லுவார்கள் , எல்லாவற்றையும் வாங்கி கொண்டு நிச்சயம் செய்யப்படும்

இறைவன் பெயராலும் அவன் தூதுவர் காட்டி தந்த வழியில் நாங்கள் கல்யாணம் செய்ய முடிவு செய்யதுவுள்ளோம் என்று 500 முதல் 1000௦௦௦ வரையிலான பத்திரிகை அச்சடிக்கப்பட்டு ஊர் முழுவதும் விநியோகம் செய்யப்படும் ஒரு வழியாக கல்யாணம் என்ற பாவச் செயல் முடிவுக்கு வரும்

150௦ கல்யாணம் இந்த சீசனில் நடந்துள்ளது என்ற விவாதம் முடிவுக்கு வந்தவுடன் அடுத்த விவாதம் அது என்ன சம்சுல் இஸ்லாம் சாமச்சரம்தான், 150 கல்யாணத்தில் எத்தனை விவாகரத்து அல்லது எத்தனை இழுபறி என்ற விவாதம் தொடங்கிவிடும்

 எதை எடுத்தாலும் ௫௦500 ருபாய்,, கடையை போல விவாகம் அனாலும் சரி விவாகரத்து அனாலும் சரி ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டணமாக வசூலித்து கொண்டு சான்றிதழ் வழங்குவதன் முலம் தங்கள் கடமை முடிந்தது என்று எண்ணுவதாக சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் மிது ஒரு குற்றச்சாட்டு உள்ளது

பட்டம் பயின்ற நிதிபதி அந்தஸ்துள்ள பல ஆலிம்கள் நமது ஊரில் இருந்தும் அரசியல் அந்தஸ்து உள்ளவர்கள் மட்டும் இந்த சங்கத்தின் உறுபினர்களாக இருப்பது வேதனைக்குரிய விஷயம் (சமிபத்தில் தேங்காய் வியாபாரிகளால் சித்தப்பா என்று அன்போடு அழைகபடுபவருக்கு பாராட்டு விழா நடத்த இச் சங்கம் முயன்றது சமுதாய சிங்கங்களின் கடும் போராட்தால் அந்த விழா நிறுத்தப்பட்டது இச் சம்பவத்தால் சம்சுல் இஸ்லாம் சங்கம் ஒரு அரசியல் சங்கமாக மாறிவருவதாக குற்றச்சாட்டும் எழுந்தது )


திருமணமாகத கன்னி பெண்கள் இருக்கும் சமுதாயமும் திருமணமாகியும் கன்னி பெண்களாக இருக்கும் சமுதாயம் நிச்சயமாக பெரும்கேடுகளை எதிர்நோக்கிய சமுதாயமே

அன்பு நேசங்களே குடும்ப வாழ்கையில் ஏற்படும் ஊடல் சண்டைகளை கூட புரிந்து கொள்ளாமல் எதற்கு எடுத்தாலும் விவாகரத்து வேண்டும் என்று சொல்லும் நம் சமூகத்தினருக்கு இஸ்லாம் காட்டி தந்த முறைப்படி திருமணம் என்றால் என்ன ? திருமண வாழ்கையை இஸ்லாம் எப்படி நமக்கு சொல்லித்தந்தது என்பவைகளை திருமணத்திற்கு முன் அந்தந்த முஹல்ல வசிகலளால் மணமகனுக்கும் மணமகளுக்கும் கலந்துரையாடல் நடத்தபடவேண்டும். முஹல்ல வாசிகளால் நடத்த முடியாது இது சாத்தியம் இல்லை என்றால் சமுதாய இயக்கங்கள் கோடை விடுமுறையில் மாணவர்களுக்க மார்க்க கலந்துரையாடல்கள் நடத்துவதை போல் நடத்தலாம்...திருமணம் செய்துகொள்ளும் மணமகன் மற்றும் மணமகள்
நிச்சயமாக ஒரு மணி நேரமாவது இந்த கலந்துரையடல்களில் கலந்து இருக்கவேண்டும் என்ற விதியை ஏற்படுத்தலாம்.

 அனைவருக்கும் சொந்தமான இயக்கமாக கருதப்படும் அதிரை பைத்துல்மாலுக்கு ஒரு வேண்டுகோளாகவே இந்த கட்டுரையை சமர்பிற்கிறேன்

நம் சமுதாய மறுமலர்ச்சிக்காக ஒன்றுபடுவோம் இறைவனின் உதவியால் வென்றுகாட்டுவோம்