பிறையைப்பார்த்துத்தான் நோன்பு நோற்க வேன்டுமா?


ரமழான் மற்றும் ரம்ஜான் மாததில் நமக்குள் எற்படும் ஒரு சர்ச்யை பிறையைப்பார்த்துத்தான் நோன்பு நோற்க வேனடுமா?

முதலில் இரைவசனம் என்ன கூறுகிறாது என்பதை பார்போம்:-சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் இரு பிரம்மாண்டமான படைப்புகளாகும். கால நேரங்களையும், நாட்களையும் கணக்கிட்டுக் கொள்ளவே இவற்றை படைத்திருப்பதாக திருக்குர்ஆனில் 20þக்கும் மேற்பட்ட இடங்களில் இறைவன் கூறுகிறான். இவ்வசனங்களில் இந்த இரண்டு கோள்களும் இணைத்தே சொல்லப்படுகின்றன. (பார்க்க: அல்குர்ஆன், 6:96, 10:05, 13:02, 21:33, 36:38௪0, 55:05, 2:189)
ஆக இரு கோள்களும் ( சொலார் சிஸ்டம் மற்றும் லுனார் சிஸ்டம்) கால நேரங்களையும், நாட்களையும் கணக்கிட்டுக் கொள்ளவே இவற்றை படைத்திருப்பதாக திருக்குர்ஆனில் இறைவன் கூறுகிறான்

நபி(ஸல்) அவர்கள் பல வணக்கமுறைகளை நமக்கு கற்றுதந்துள்ளார்கள் அதனில் சில வணகங்களை கால, நேரங்களுக்குள் நிறைவேற்ற வேன்டும்.ஐவேளைத் தொழுகை, ஜுமுஆ பெருநாள் தொழுகை, ஸஹர்,இஃப்தார்,நோன்பு, ஹஜ் மற்றும் பெருநாள் தினம்

தொழுகைகளின் நேரத்தைப் பற்றி நபி (ஸல்) கூறும்போது,

"கிழக்கு அடிவானத்தில் வைகறை புலர்வது பஜ்ரு தொழுகையின் நேரத்தையும், சூரியன் உச்சி சாய்வது லுஹர் நேரத்தையும் ஒரு மனிதனின் நிழல் அவன் உயரத்தின் அளவுக்கு வருவது அஸர் நேரத்தையும் சூரியன் மறைவது, மஃரிப் நேரத்தையும் வானில் செம்மேகம் மறைவது, இஷா நேரத்தையும் அறிவிக்கிறது" என கூறினார்கள். (முஸ்லிம், -ஹதீஸ் சுருக்கம்)
ஆக சுரியனை அடிபடையாக (சொலார் சிஸ்டம்)கொன்டு தொழுகையின் நேரத்தை நமக்கு வகுத்துள்ளார்கள்

நோன்பு நேரத்தைப் பற்றி நபி (ஸல்) கூறும்போது

"பிறை பார்த்து நோன்பு வையுங்கள், பிறை பார்த்து நோன்பை விடுங்கள்" (புகாரி, முஸ்லிம்)
ஆக சந்திரனை அடிபடையாக (லுனார் சிஸ்டம்)கொன்டு நேரத்தை நமக்கு வகுத்துள்ளார்கள்

இங்கு மிக துள்ளியமாக தொழுகை சுரியனை (சொலர் சிஸ்டம்) அடிபடையாக கொன்டு நேரம் அமைக்கபட்டுலுதையும், முதல் நோன்பு மற்றும் இறுதி நோன்பு,பெருனால் அகியவை சந்திரனை(லுனார் சிஸ்டம்) அடிபடையாக கொன்டு நேரம் அமைக்கபட்டுலுதையும் நம்மால் அரிய முடிகிறது

அன்புச் சகோதற்களே இங்குதான் நாம் அதிகம் சிந்திக்க வேன்டும்

எல்லாம் அறிந்த இறைவன் குழப்பம் எற்படும் என தெறிந்தும் என் முதல் நோன்பு மற்றும் இறுதி நோன்பயை சந்திரனை(லுனார் சிஸ்டம்) அடிபடையாக கொன்டு நேரம் அமைக்கபட வேன்டும்? பிறை பார்த்து ரமாலன் அடைந்த பின் தொடந்து 30 பகலில் நோன்பயை நிறைவேற்றுங்கள் என்று சொல்லமல் பிறை பார்த்து நோன்பை விடுங்கள் என நபி(ஸல்) கூற காரனம் என்ன?

ஆக நோன்பு 29 அல்லது 30 என இறைவனே நிர்னயம் செய்து அதை சந்திரன் முலம் நமக்கு தெளிவுபடுதிகிறான்

அதிரையில் பிறை கானமுடியவில்லை என்றால் அமெரிக்கவை அனுகுவதில்லை சென்னை, சிலோன் அல்லது சில கூறிபிட்ட துலைவில் உள்ள ஊர்களை அனுகி அறிவிக்கபடுகிறது

ஆக பிறையைப்பார்த்துத்தான் நோன்பு நோற்க வேன்டும் என் என்னால் முடிந்தளவுக்கு எடுத்துறையுத்ளேன்

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

ரமலான் முபாரக்!


(பிறருக்கு) நன்மை செய்யுங்கள்,ஏனென்றால் நன்மை செய்வோரை இறைவன் நேசிக்கிறான்"(2:195)
யார் கெட்ட பேச்சுக்களையும், கெட்ட செயல்களையும் விட்டுவிடவில்லையோ அவர் உணவை விடுவதிலும், குடிப்பை விடுவதிலும் அல்லாஹ்விற்கு எந்த தேவையும் இல்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) - ஆதாரம்: புகாரி)
ரமலான் மாதம் அருள் நிறைந்த மாதம், நன்மைகளை அதிகம் செய்யும் மாதம், பிழைப்பொறுப்புத் தேடும் மாதம், அல்லாஹ்வை அதிகம் நெருங்கும் வாய்ப்பைப் பெறும் மாதம், சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்பட்டு நரகத்தின் வாசல்கள் மூடப்படும் மாதம், ஷைத்தான்கள் விலங்கிடப்படும் மாதம், ஆயிரம் மாதங்களை விட சிறப்புமிக்க ஒரு இரவைக் கொண்ட மாதம், நரகவாதிகள் நரகத்திலிருந்து விடுதலை பெறும் மாதம், குர்ஆனை இப்பூவுலகத்தில் இறக்குவதற்கு அல்லாஹ் தேர்ந்தெடுத்த மாதம், துஆக்கள் அங்கீகரிக்கப்படும்
மாதம்
நோன்பின் கடமைகள்
1. பருவமடைந்த முஸ்லிமான ஆண், பெண் அனைவரின் மீதும் நோன்பு நோற்பது கடமையாகும்.
2. முதுமை மற்றும் நீங்காத நோயின் காரணத்தினால் நோன்பு நோற்க முடியாதவர்கள் ஒவ்வொரு நோன்பிற்கும் பகரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்.
3. பைத்தியக்காரர்கள், நன்மை-தீமையை பிரித்தறிய முடியாத மூளை வளர்ச்சி குன்றியவர்கள், வயோதிகத்தால் புத்தி பேதலித்தவர்கள் ஆகியோர்கள் மீது நோன்பு நோற்பது கடமையில்லை. நோன்புக்கு பகரமாக ஏழைகளுக்கு உணவு கொடுக்க வேண்டியதுமில்லை.
4. சில நாட்களில் நீங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படும் நோயாக இருந்தால் அந்த நோயின் காரணமாகவும் நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. நோய் நீங்கியபின் விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்.
5. பயணம் செய்பவர்களுக்கு நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. ஊர் திரும்பியபின் விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்.
6. கற்பமாக இருக்கும் பெண், அல்லது பாலூட்டிக் கொண்டிருக்கும் பெண் நோன்பு நோற்பதால் தனக்கோ அல்லது குழந்தைக்கோ ஏதேனும் துன்பம் வரலாம் என்று பயந்தால் நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. அந்தப்பயம் நீங்கியபின் விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்.
7. மாதவிடாய் அல்லது பிரசவ இரத்தம் வந்துவிட்டால் நோன்பு நோற்கக்கூடாது. இரத்தம் நின்ற பிறகு விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்.
8. "தீ" மற்றும் நீரில் மூழ்குதல் போன்ற ஆபத்துக்குள்ளானவர்களை காப்பாற்றுவதற்காக நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. பிறகு அந்த நோன்பை நோற்க வேண்டும்.

நோன்பை முறிக்கும் செயல்கள்
1. சாப்பிடுதல், குடித்தல் போன்றவற்றால் (அவைகள் உடலுக்கு பயன்தராத புகைபிடித்தல் போன்றவையாக இருந்தாலும் சரியே) நோன்பு முறிந்து விடும்.
2. முத்தமிடுதல், அணைத்தல், சுய இன்பம் போன்றவற்றால் இந்திரியம் வெளியானால் நோன்பு முறிந்து விடும், தூக்கத்தில் தானாகவே இந்திரியம் வெளியானால் நோன்பு முறியாது.
3. வேண்டுமென்று வாந்தி எடுத்தால் நோன்பு முறிந்து விடும். தானாகவே வாந்தி வந்தால் நோன்பு முறியாது.
4. உணவைப் போன்று சக்தியூட்டக்கூடிய பொருட்களை (மருந்து, குளுக்கோஸ் போன்றவைகளை) ஊசி போன்றவற்றின் மூலம் உடம்புக்கு செலுத்தினாலும் நோன்பு முறிந்து விடும்.
5. மாதவிடாய் மற்றும் பிரசவ இரத்தம் வந்துவிட்டால் நோன்பு முறிந்து விடும்.