தி கிரவுன் மஸ்ஜித் மரைக்காப்பள்ளி

தி கிரவுன் மஸ்ஜித் மரைக்காப்பள்ளி

அதிரையின் மிக பழைமையான பள்ளி என்றால் அனைவருக்கும் நினைவில் வருவது மரைக்காப்பள்ளி. நான் பார்த்து வியந்த இந்த பள்ளியின் வரலாறு மற்றும் அதிரைக்கு மட்டும் அல்ல சுற்றயுள்ள ஏனைய முஸ்லிம்கள் ஊர்களுகும் தலைமை பள்ளியாக விளங்கும் இந்த பள்ளியை பற்றிய சில சுவாரசியமான விசயங்களை இந்த கட்டுரையின் வாயிலாக பதியவிரும்புகிறேன் ..

எனது வாழ்வின் ஒரு அங்கமாக இருந்த இந்த இருட்டு பள்ளி பல வருடங்களுக்கு பின் இன்று புதிய கட்டிடத்தில் பிரகாசமாக இருக்கிறது ...உலமாக்கள் நிறைந்த வரிசைகள், பறவைகளின் சத்தை தவிர வேறு சத்தம் அறியாத அமைதி , தேர்ந்து எடுக்கப்பட்ட ஆலிம்களின் தெள்ள தெளிவான குரலில் இறை வசனம் தொழுகபடும் தொழுகையை தொழுதால் எதோ சதித்துவிடத்தை போலும் தக்குவவை அடைந்துவிடதையும் போலும் ஒரு உணர்வு ஏற்படும்

அதிரையில் கட்டப்பட்ட முதல் பள்ளியகிய மரைக்கபள்ளியை கட்டியவர் தஹலமரைகையர் என்று வரலாறு கூறுகிறது .கி .பி1180 கட்டப்பட்ட இந்த பள்ளி எட்னுறு வருடங்களாக இறைவனின் நாட்டத்தினால் இன்றும் எந்த ஒரு தொய்வுவின்றி ஐய்வேளை தொழுகை நடைபெற்று வருகிறது.எனக்கு தெரிந்த பழைய கட்டிடம் நவாபுகளின் கட்டடகளையினால் கட்டப்பட்டது போலவே தோன்றும்,அதிரையின் எந்த பள்ளியுளும் இல்லாத ஒரு அதிசய டவர் ஒன்று பள்ளியின் நுழைவாயில் பார்க்கமுடியும் அதுதான் நகரா(Drum) டவர் .ஏனைய மஸ்ஜித்ல் நகரா மஸ்ஜிதின் ஒதுங்கு புறமாக வைதிர்ருபார்கள் ஆனால் இந்த பள்ளியில் மட்டும் நாகரக்கு என்று ஒரு டவர் அமைக்க காரணம் இந்த பள்ளியில் இருந்து விடுக்கப்படும் அழைப்பு ஊர்மக்கள் அனைவர்க்கும் சென்றோடையவேண்டும் என்பதர்க்காகவே வைத்திருக்கவேண்டும் இதன் முலம் மரைகப்பள்ளி நமது ஊரின் முதல் பள்ளி மட்டும் அல்ல தலைமை பள்ளியாக இருந்திர்க வாய்புள்ளது

இந்த பள்ளியின் சாபு நம் அண்டைய நாடான இலங்கையில் இருந்து வந்தவர் சுமார் அரை நுற்றன்ராக இங்கேயே இருந்து விட்டார் அதற்க்கான கரணம் இன்றும் மர்மாகவே வைத்துள்ளார்

சமிபத்தில் நோன்புக்காக நான் ஊர் சென்றேன் அப்பொழுது 29வது நோன்பு அன்று புதுமனை தெருவில் இருந்த எனக்கு என் உம்மாவிடம் இருந்து தொலைபேசிக்கு அழைப்பு வந்தது சண் தொலைகாட்சியில் தலைமை காஜி நாளை பெருநாள் என்று அறிவித்துவிட்டார் இருந்தாலும் மரைகபள்ளியில் என்ன சொல்கிறார்கள் என்று எனக்கு தெரியபடுத்து தரவிய தொழ வேண்டுமா அல்லது வேண்டாம்மா என்பதை தெரிபடுத்து என்றார்கள் .தலைமை காஜியே அறிவித்தபிறகும் மரைக்காப்பள்ளி செல்ல வேண்டிய அவசியம் ஏன் என்று எண்ணியவனாக பள்ளிக்கு சென்றேன் .. அங்கு சென்றபின்தான் என் உம்மா மட்டும் அல்ல முத்துபேட்டை ,மதுகுர் ,மல்லிபட்டினம் போன்ற ஊர்களும் மரைகபள்ளியின் முடிவுக்காக காத்துகொண்டு இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டேன். அங்கு இருந்த இளம் அளிம்களில் ஒருவரான எனது காக்காவிடம் என் இந்த பரபரப்பு செய்தி தொலைகாட்சியில் தெரியபடுத்தபட்டுளது இவ்வளவு இருந்தபொழுதும் பிறை பார்த்தவர் யார், காஜியின் கையப்பமிட்ட கடிதத்திற்காக இவ்வளவு மக்களும் வெய்ட் செய்ய வேண்டிய காரணம் என்ன என்று வினவினேன் அவரிடம் .. அதற்க்கு என் காக்க சொனார்கள் தம்பி ஒரு நோன்பை திண்டுவிட்டால் இறைவனிடத்தில் தண்டனை என்ன வென்று உனக்கு தெரியாது தெரிந்தால் இப்படி நீ கேட்டு இருக்கமாட்டாய் தக்க சான்றுகள் கிடைக்கும்வரை பொருமையகதான் இருக்க வேண்டும் என்றார்கள் .காஜிடம் இருந்து பேக்ஸ் கிடைத்தபிறகு முதுபேட்டைகு பொறுப்பாளராக இருந்த என் காக்க தொலைபேசி முலம் செய்தியை அனுப்பியதோடு கடிதத்தையும் அனுபிவைதார்கள் இதைபோல மற்ற ஊர்களின் பொருபாளர்கள் செய்தியை அனுப்பிய வண்ணமாக இருந்தார்கள் (பல ஊர்கள் நமது பள்ளியின் முடிவுக்காக காத்து இருந்தபொழுதும் ஹனிப் பள்ளியில் மட்டும் தன்னிச்சையாக தரவிய தொழுகை நடத்தபட்டது ). இப்படியாக ஒரு நெட்வொர்க்யின் தலைமை இடமாக இருக்கும் நமது மரைகபள்ளியை பார்த்து

தி கிரவுன் மஸ்ஜித் மரைக்காப்பள்ளி என்று அழைக்க தோன்றியது எனக்கு.......


அன்புடன்

டைரி