சரியான முறையில் தட்டினால் மைலாப்பூர்க்கு மட்டும் அல்ல மன்னடிக்கும் சட்டத்தின் கதவு திறக்கப்டும் !!!

?ச்சீயா?...போப்பா எங்களுத்தான் சூடு சொரனை இல்லையே, அடுத்த நிதியமைச்சரும் அவர்தான் என்ற தலைப்பில் அதிரை எக்ஸ்பிரஸ் கட்டுரைக்கு எமது பின்னுட்டத்தை இங்கு மீள்பதிவாக பதிந்துள்ளேன் 





இந்த தரைபடைகளை வளர்ப்பது அங்கு உள்ள நம் சமுதாயத்தை சார்ந்த இரும்பு வியாபாரிகள் , அந்த சுய நல வியாபாரிகளை ஆதரித்து அவர்களுக்கு கடையை கொடுத்திருப்பது நமது மியாசி பள்ளி நிறுவாகம், இப்பள்ளி நிருவாகமும் சரி இப்பள்ளியை சுற்றி வாழும் நம் சமுதய கண்மணிகளும் சரி ஒரு நிமிடம் சிந்தித்து பார்த்து இருந்தால் எபொழுதோ இதற்கு தீர்வு கண்டிருப்பார்கள்...இதே நிலைமை நான் படித்த ப்ரோட்வே டான் பாஸ்கோ பள்ளியை சுற்றியும் இருந்தது .. அன்றைய தலைமை ஆசிரயர் அருட் தந்தை லூர்து சுவாமி அவர்களின் விட முயற்சியால் வேறு இடம் மாற்றபட்டார்கள் அந்த தருணத்தை நினைவு படுத்த விரும்புகிறேன் ......

பள்ளி மாணவர்களாகிய நாங்கள்தான் முதலில் எங்கள் தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தோம் அந்த புகாரின் பெயரில் பள்ளி நிறுவாகிகளுடன் ஆலோசித்து நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். எங்கள் பள்ளியை சுற்றி வாழ்ந்த தரைப்படைகள் கிருஸ்தவ மதத்தை சார்ந்தவர்களா இருந்ததால் அவர்களை அகற்றுவதற்கு கிருஸ்துவ மிசனரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் இருபினும் அதை பொருட் படுத்தாமல் பள்ளி மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகள் மாணவர்களுக்குத்தான் மதத்துக்கு அல்ல , மாணவர்களுக்கு எந்த வகையிலும் குந்தகம் விளைவித்தல் அதை எதிர்ப்பேன் என்று கூறிய முதல்வர் முத்தியால் பேட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார் .. வழக்கம் போல் காவலர்கள் காலையில் நடவடிக்கை எடுத்து மாலையில் காசு வாங்கி கொண்டு அவர்களை அங்கேயே மிண்டும் குடி அமர்த்தினர் .......மனம் தளராத முதல்வர் முன்று முறை புகார் அளித்தும் காவல் துறையினர் கண் துடைப்பு நடவடிக்கையே எடுத்தனர் (அந்த தரைப்படையினர் நடத்து விபசாரத்தில் கிடைக்கும் பெரும் பங்கு காவலர்களுக்கு கிடைப்பதால் மிண்டும் மிண்டும் கண்துடைப்பு நடவடிக்கையே எடுத்தனர் ) உடனடியாக உயர் நிதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து நிரந்தர தடையை பெற்றார் பள்ளி முதல்வர் ......

இன்று வரையும் இந்த பள்ளியின் சுற்று புறம் சுகாதாரமாக இருபதற்கு இந்த முதல்வரின் நடவடிக்கைதான் காரணம்.......

 சரியான முறையில் தட்டினால் மைலாப்பூர்க்கு மட்டும் அல்ல மன்னடிக்கும் சட்டத்தின் கதவு திறக்கப்டும் !!!