வழிகாட்டுதலின் அவசியம்

நன்மைகளிலே சிறந்த நன்மை கல்வி(கற்பதும்/கற்பிபதும்) என்றார்கள் நமது கன்மணி நாயகம் நபி (ஸல்) ,போர் கைதிகள் அறிந்த கல்வியை தமது மக்களுக்கு கற்று கொடுப்பவர்களை விடுதலை செய்யும் படி ஆனையிட்டாற்கள் உத்தம நபி(ஸல்),ஆக கல்வியின் முக்கியதுவத்தை தலைவர் நபி (ஸல்) உனர்தியதை விலங்க நாம் இங்கு கடமைபட்டுளோம்

நம் முன்னோர்கள் எடுத்த பெரும் முயற்சியால் அதிரையில் இன்று நாம் 60% மேல் கல்வி அறிந்த சமுதாயமக மாறியுள்ளோம்இருப்பினூம் பட்டம் படித்த நமது சகோதர்கள் பல துரைகளில் இன்னும் அரம்ப கட்டத்தில் உள்ளனர், சில சகோதர்கள் தமக்கு கிடைத்த வழிகாட்டுதல் மூலம் தமது துரைகளில் உயர்ந்து உள்ளனர்

B.a, B.Sc, BBA, MBA போன்ற பட்டபடிபினை படித்தும் Office assistance/Chai boy போன்ற வேலை செய்யும் அவலம் என்?
சரியான வழிகாட்டுதல் இல்லாமலும் Personal qualification எனகூடிய communication skills , additional qualification எனகூடிய like C.A for B.A(C.S)/ B.COM, student, C.C.N.A/C.I.S for Networking students n etc…., முத்தவர்கள் வலிகாட்டுதல் இல்லாமல் படித்தும் பாமரனாகயிருக்கும் நம் சகோதர்களுக்கு எந்த வகையான வழிகாட்டுதலை செய்ய வேண்டும்?

நம் முன்னோர்களால் கல்வி பயன் அடைந்தோம்!. நமது சங்கதினருக்கு நாம் என்ன செய்யப்போகிறோம்?????

ஆலிம்களை பூசாரி என்று ஆனவத்தில் அரட்டை அடிக்கும் கனவான்களே, இதே இதைபற்றியும் விவதிப்போம் வாருங்கள்

- The Diary

அதிரை பைத்துல்மாலுக்கு டைரியின் கேள்விகள்
பிரம்மாண்டமான திருக்குர் ஆன் மாநாட்டை வருடந்தோரும் நடத்தி வரும் அதிரை பைத்துல்மால் மற்ற ஊர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவதை யாராலும் மறுக்கவோ அல்லது மறைக்கவோ இயலாது. ஏழை எழிய மக்களுக்கும் மாணவர்களுக்கும் அதிரை பைத்துல்மால் செய்துவரும் தொண்டு பாராட்டக்குரியது(எல்லாப் புகழும் இறைவனுக்கே!). இத்தொண்டு நிர்வனத்தார் மீது எனக்குள் எழுந்துள்ள கேள்விகளை இங்கு தொகுத்துள்ளேன்.

1) ஆஸ்பத்திரி தெருவில் இந்த நிர்வனத்திற்கு சொந்தமான போதிய இடவசதியுள்ள அலுவலகம் இருந்தும் நடுத்தெருவில் மீண்டும் எந்தவொரு வருவாயும் இல்லாத மற்றுமொரு அலுவலகம் அமைக்க அவசியமென்ன?
2) புதிதாக இஸ்லாத்தை தழுவி நமது ஊருக்கு வரும் சகோதரர்களுக்கு சிறு வியாபாரம் தொடங்குவதற்கு கூட எந்தவொரு நிதியுதவி செய்வதற்கு எந்தவொரு தொண்டு நிர்வனமும் முன் வருவதில்லை என மரைக்கா பள்ளியில் கூடும் இளம் உலமாக்களின் கேள்விகளுக்கு நிர்வனத்தாரின் பதில் என்ன?

3) வட்டியில்லா கடன் மூலம் நகை அல்லது சொத்துக்களின் மீது கடன் வழங்கும் அதிரை பத்துல்மால் எந்தவொரு வசதியில்லாத ஏழைகளுக்கு பரம்பரை பரம்பரையாக நமதூர் மண்ணில் வாழ்ந்து வரும் குடும்பத்தாருக்கு கடன்கொடுக்க மறுப்பது ஏன்?

4) வட்டியை ஒழிப்பதற்காக தொடங்கப்பட்ட இந்நிர்வனம் இருந்தும் புதுக்கோட்டையிருந்து வரும் ஃபைனான்சியர்கள் சுவற்றின்மீது ஏறி நமது சகோதிரிகளிடம் வட்டியை வசூல் செய்யும் நிலைமைக்கு தள்ளப்பட்டக் காரணம் என்ன? இதைப்பற்றிய உங்களுடைய ஆய்வு அல்லது சொலூஷன்/கன்குலூஷன் தான் என்ன?

5) அதிரை பைத்துல்மாலின் ஆண்டு வரவு சிலவு அறிக்கை, நீங்கள் செய்துவரும் நற்காரியங்கள் என்ன, அடுத்தக்கட்ட திட்டங்கள் என்ன போன்ற விபரங்கள் எந்த இணையதலத்தில் பதியப்பட்டுள்ளது அல்லது ஆண்டு அறிக்கை புத்தகமாக வெளியிடப்படுகிறதா என்பதை தெரியப்படுத்தினால் என்னை போன்று கேள்வி எழுப்புவோர்களுக்கு உங்களுடன் சேர்ந்து நற்காரியங்களில் ஈடுபடுவதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக!
-Diary