சரியான முறையில் தட்டினால் மைலாப்பூர்க்கு மட்டும் அல்ல மன்னடிக்கும் சட்டத்தின் கதவு திறக்கப்டும் !!!

?ச்சீயா?...போப்பா எங்களுத்தான் சூடு சொரனை இல்லையே, அடுத்த நிதியமைச்சரும் அவர்தான் என்ற தலைப்பில் அதிரை எக்ஸ்பிரஸ் கட்டுரைக்கு எமது பின்னுட்டத்தை இங்கு மீள்பதிவாக பதிந்துள்ளேன் 





இந்த தரைபடைகளை வளர்ப்பது அங்கு உள்ள நம் சமுதாயத்தை சார்ந்த இரும்பு வியாபாரிகள் , அந்த சுய நல வியாபாரிகளை ஆதரித்து அவர்களுக்கு கடையை கொடுத்திருப்பது நமது மியாசி பள்ளி நிறுவாகம், இப்பள்ளி நிருவாகமும் சரி இப்பள்ளியை சுற்றி வாழும் நம் சமுதய கண்மணிகளும் சரி ஒரு நிமிடம் சிந்தித்து பார்த்து இருந்தால் எபொழுதோ இதற்கு தீர்வு கண்டிருப்பார்கள்...இதே நிலைமை நான் படித்த ப்ரோட்வே டான் பாஸ்கோ பள்ளியை சுற்றியும் இருந்தது .. அன்றைய தலைமை ஆசிரயர் அருட் தந்தை லூர்து சுவாமி அவர்களின் விட முயற்சியால் வேறு இடம் மாற்றபட்டார்கள் அந்த தருணத்தை நினைவு படுத்த விரும்புகிறேன் ......

பள்ளி மாணவர்களாகிய நாங்கள்தான் முதலில் எங்கள் தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தோம் அந்த புகாரின் பெயரில் பள்ளி நிறுவாகிகளுடன் ஆலோசித்து நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். எங்கள் பள்ளியை சுற்றி வாழ்ந்த தரைப்படைகள் கிருஸ்தவ மதத்தை சார்ந்தவர்களா இருந்ததால் அவர்களை அகற்றுவதற்கு கிருஸ்துவ மிசனரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் இருபினும் அதை பொருட் படுத்தாமல் பள்ளி மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகள் மாணவர்களுக்குத்தான் மதத்துக்கு அல்ல , மாணவர்களுக்கு எந்த வகையிலும் குந்தகம் விளைவித்தல் அதை எதிர்ப்பேன் என்று கூறிய முதல்வர் முத்தியால் பேட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார் .. வழக்கம் போல் காவலர்கள் காலையில் நடவடிக்கை எடுத்து மாலையில் காசு வாங்கி கொண்டு அவர்களை அங்கேயே மிண்டும் குடி அமர்த்தினர் .......மனம் தளராத முதல்வர் முன்று முறை புகார் அளித்தும் காவல் துறையினர் கண் துடைப்பு நடவடிக்கையே எடுத்தனர் (அந்த தரைப்படையினர் நடத்து விபசாரத்தில் கிடைக்கும் பெரும் பங்கு காவலர்களுக்கு கிடைப்பதால் மிண்டும் மிண்டும் கண்துடைப்பு நடவடிக்கையே எடுத்தனர் ) உடனடியாக உயர் நிதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து நிரந்தர தடையை பெற்றார் பள்ளி முதல்வர் ......

இன்று வரையும் இந்த பள்ளியின் சுற்று புறம் சுகாதாரமாக இருபதற்கு இந்த முதல்வரின் நடவடிக்கைதான் காரணம்.......

 சரியான முறையில் தட்டினால் மைலாப்பூர்க்கு மட்டும் அல்ல மன்னடிக்கும் சட்டத்தின் கதவு திறக்கப்டும் !!!

1964 ஆம் ஆண்டு அதிரையில் நடந்தது என்ன? part 2


தனுஸ்கோடி பெயரை கேட்டவுடன் ஏதோ சுற்றுலாதலமோ  அல்லது  பார்பனர்களின் கற்பனை கடவுள்கள் திராவிடர்களை விழ்த்திய இடமோ என்று நினைத்துவிடாதிர்கள்  தென் இந்தியாவின் நுழைவாயிலாக இருந்த தனுஸ்கோடி இன்று வெறும் பனைமரக்காடுகளாக மாற்றிய சோகத்தை பார்பதற்கு முன் அன்றைய தனுஷ்கோடி துறைமுகம் வாய்ப்பையும் வளத்தையும் எப்படி எல்லாம் நமக்கு தந்தது என்று பார்போம் 

எழுபது  ஆண்டுகளுக்கு  முன்னால் வெறும் இரண்டாயிரம் மக்கள் வாழ்ந்த இடத்திருக்கு தினம் இரண்டு இரயில்கள் , கஷ்டம்ஸ் அலுவலகம் ,தபால் நிலையம், பல கோடி ருபாய் செலவில் பாம்பனில் ரயில்களுக்காவும்  கப்பல் போக்குவரத்துக்கும் இரும்பு பாலம் அமைத்துகொடுதது  அன்றைய இந்திய பிரிட்டிஷ் அரசாங்கம். சும்மாவா அந்த அரசாங்கம் செய்து கொடுதிற்கும் நிச்சயமாக ஒரு   மிக பெரிய லாபநோக்கதுடன் செய்து  இருக்கவேண்டும் 

 அன்றைய சிலோனுக்கும் ( இன்றைய  ஸ்ரீலங்கா ) இந்தியாவிற்கும் பாலமாக அமைந்த இந்த துறைமுகம் மூலம்தான் அடிமை மதம்மான இந்து மதத்தில் இருந்து  நம்மை விடுவிக்க வந்த சத்திய மார்க்கம் இஸ்லாம் நமக்கு கிடைத்தது இந்த துறைமுகம் வாயிலக்கத்தான் அன்று வியாபாரத்திற்காக வந்த அரேபியர்களின்  நேர்மை உண்மை வாழ்க்கை வழிமுறையால் கவரப்பட்டு இஸ்லாத்தை ஏற்றுகொண்டவர்களின் சங்கதினர்களின் ஒரு கூட்டம்தான் இன்றைய அதிரைவாசிகள் இன்றும் இதற்க்கு சான்றாக கீழக்கரை  காயல்பட்டினம் போன்ற இஸ்லாமிய ஊர்களில் அரேபியர்கள் கட்டிய பள்ளிகளை பார்க்கலாம் 

சரி விசயத்திற்கு  வருவோம் கடல் வணிகர்களின் சங்கதினர்களான நம் முன்னோர்கள் நிச்சயமாக பிளைபிற்காக அதிரைக்கு வந்திருக்க வாய்புகள் இல்லை மாறாக சத்திய மார்கத்தை எத்தி வைபதற்காக இடம் பெயர்ந்திற்க வேண்டும் .எழுவது ஆண்டுகளுக்கு முன் வரை தனுஷ்கோடி துறைமுகத்தில் ஏற்றுமதி இறக்குமதி தொழில் கொடிகட்டி பரந்த இஸ்லாமியர்களையும் குறிப்பாக அதிரை இஸ்லாமியர்களையும் வரலாறு மறந்து இருக்க வாய்ப்புஇல்லை , அதே நிலைமை இன்றும் நீடித்து  இருந்தால் போர்ட் ,ஹயுண்டாய் போன்ற கார் தொழில்சாலைகள் மேலும் பல தொழில் நகரங்கள் அதிரைக்கு அருகாமையில் அமைந்து இருக்கலாம் 


1964 ஆம் ஆண்டு  17 டிசம்பர் மாதம் தெற்கு அந்தமானில் உருவாகிய காற்று அழுத்த தாள்வு மண்டலம் 19 டிசம்பர் பெரும் புயலாக மாறி வரலாறு கண்டிராத புயல் டிசம்பர் 22-23 தேதி வவுனியாவில் இருந்து palk strait இடையே மணிக்கு 270௦ கி மி per hour  புயல் கடந்தது, இந்த  நிகழ்வுக்கு பிறகு தனுஷ்கோடி துறைமுகம் வெறும் மணல் திட்டு நிறைந்த கடலாக மாறியது .இதே புயல் அதிரையும் உலுக்கி எடுத்தது  வணிக நகரமாகவும் ,சட்டமன்ற தொகுதியாக இருந்த அதிரை இந்த புயலுக்கு பின் சொந்த தொழில் வாய்புகளை இழந்து வெளிநாடுகளுக்கு பிளைக்கசென்றனர் இன்று வரை பிறக்க ஒரு இடம் பிழைக்க ஒரு இடம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் நம் வாழ்கை பலஸ்தினியர்களை போலவும் இலங்கை தமிழர்களை போலவும் சென்று கொண்டு இருக்கிறது .தற்போதைய அரசு மீண்டும் பழைய நிலை திரும்புவதற்காக 200௦௦ ஆண்டு கனவு திட்டமான சேது திட்டத்தை நிறைவேற்ற முயன்றும் காவி கும்பலால் மீண்டும் சேது கால்வாய் திட்டம் ஒரு கனவு திட்டமாக மாற்றப்பட்டுள்ளது . இறைவன் உதவியால் இத் திட்டம் நிறைவேற்றப்படும் .அதன்மூலம் மேலும் பல வேலை வாய்புகள் கிடைக்கும் காலம் வெகுதுளைவில் இல்லை 



1964 ஆம் ஆண்டு அதிரையில் நடந்தது என்ன?


அதிரையின் வரலாறை அறியும்  ஆவலில் கடந்த கால நினைவுகளை எனது தாயாரிடம் கேட்டு அறிந்து கொள்ளுவது எனது வழக்கம். அந்த வகையில்  அவர்கள் ஒரு நாள் என்னிடம் கனத்த இதயத்துடன் சொன்னார்கள் தனது தந்தை ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தில் ஒரு தொழில் அதிபராக இருந்ததாகவும் ஒரு மிக பெரிய புயல் தமிழகத்தை தாக்கிய பிறகு பெரும் நஷ்டத்தை சந்தித்த அவர்கள்  என்ன செய்வது என்று தெரியாமல் தன் காலத்தை ஊரிலே கழித்தகவும் செல்வ செழிப்புடன் அதிரையில் வாழ்ந்த பல குடும்பங்கள் வறுமையை சந்திதகாவும் சொன்னார்கள் 

முழங்கால் வரை வெள்ளை சட்டை , வெள்ளை வேட்டி துருக்கியர் அணியும் தொப்பி எழுத படிக்கும் அளவுக்கு கல்வி, தமிழ் மொழியை தவிர வேறு மொழி அறியாதவர் எனது அப்பா (தாத்த) ஒரு தொழிலதிபர் அனால்  பல வசதிகள் நிறைந்த இந்த காலத்தில் மேல் படிப்புகள் எல்லாம் படித்த நான் மேலும் சுதந்திர நாட்டில் பிறந்த நான் அயல் நாட்டில் இரண்டாம் தர தொழிலாளியாக வேலை செய்ய கரணம் என்ன ? பாசம் , நேசம் , காதல்  உறவுகள் என்று அனைத்தையும் இழந்து ஒவ்வொரு பொழுதையும் தீனர்களுகாக கழிப்பதற்கு கரணம் என்ன ? என்ன படித்தாலும் அயல் நாட்டு வாய்ப்பை தவிர வேறு வாய்ப்பு எதுவும் இல்லாத நிலைமை கடலோர தமிழர்களுக்கு குறிப்பாக இஸ்லாமிய தமிழர்களுக்கு ஏற்பட காரணம்  என்ன ? நம் முன்னோர்களுக்கு கிடைத்த வாய்ப்புகள் நமக்கு ஏன் கிடைக்கவில்லை ? வாய்ப்புகளை உடைத்து எறிந்த அந்த கோர சம்பவம் என்ன என என்னிவனாக இருந்த எனக்கு சமிபத்தில் ஒரு தொலைகாட்சியில் அந்த சம்பவத்தை படம் பிடித்து காட்டினார்கள் 

1964  ஆம் ஆண்டு நடந்த அந்த சம்பவம் தமிழகத்தை மட்டும் அல்ல இந்தியாவையும் சேர்த்து உலுக்கியது அந்த கோர சம்பவம் 
தனுஸ்கோடி 
(தொடரும் )


குர்ஆன் மாநாட்டின் கரும் புள்ளி

அன்பர்களே இந்த விவகாரத்தில் நானும் அதிரைவாசி என்பதால் என்னுடையா கருத்தையும் பதிவு செய்ய விரும்பிகிறேன் 


 நான் வஞ்சிகபட்ட நிலையில் இருக்கிறேன் என்று தன் உரையை ஆரம்பித்தார் மௌலவி மன்சூர் ....தான் அடுக்கபோகும் குற்றச்சாட்டின் பின்புலதுக்கு காரணம் தனக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என்பதை தவிர வேறு எதுவும் இல்லை என்பதை மிக தெளிவாக ஆரம்பத்திலேயே சூசகமாக தெளிவுபடுதிகிறார் ....தன் முதல் குற்றச்சாட்டை விழா நடத்துனர் மிது சுமத்துகிறார், ஒரு தனிப்பட்ட நபரை எந்த அளவுக்கு கேவலமாக விமர்சிக்க முடியுமோ அந்த அளவுக்கு நாகரிகம் இல்லாமல் விமர்சிக்கிறார் ...

மேதகு மௌலவி அவர்களுக்கு தெரியாத என்ன விழா நடத்துனர் விருபதிற்கு விழா நடப்பதில்லை விழாவின்  தலைவர்கள், செயலாளர்கள் எடுக்கும் முடிவை தெரியபடுத்துவதே விழா முகவரின் வேலை என்று தெரிந்தே விமர்சிக்கிறார் .மேதகு மௌலவி அவர்களின் உள்நோக்கம் யாதெனில் தம்மை ப்ரைம் டையத்தில் பேச அனுமதிக்காத அதிரை பைதுல்மாலையும் அதை நடத்தும் அதிரை மக்களையும் விழா நடத்துவதற்கு அருகதை அற்றவர்கள் என பொருள்படும் படி பேசுவதே  மற்ற பேச்சாளர்களையும் அழைத்து நாம் அசிங்கபடுத்திவிடுவதாக வசையடுகிறார், பின்பு செத்த பாம்பை அடிப்பது போல் நடந்து முடிந்த விவகாரத்தில் இமாம் ஷாபி நிறுவாகத்தை விமர்சிக்கிறார் பாவம் மேதகு மௌலவி அவர்களுக்கு இது முடிந்து போன விஷயம்  என்று தெரியாமல் போய்விட்டது எப்படியாவது இந்த ஊர் மக்களையும் அவர்கள்  நடத்தும் நிறுவனங்களை குறை குற  வேண்டும் என்ற குறிகிய நோக்கத்துடன் விமர்சிக்கவேண்டும் என்றே நகரிகமற்றமுறையில் விமர்சிதுவிடுகிறார் 

உலக தமிழ் முஸ்லிம்கள் மத்தியில் நமது ஊரை கலங்கபடுதிய மேதகு மௌலவி மன்னிப்பு கோரும் வரை அவரை பற்றி விமர்சிப்பது அல்லது அதிரை மக்கள் தன்னிலை விளக்கம் அழிப்பது எங்கள் உரிமை என்றே நான் கருதிகிறேன் 

இப்படிக்கு டைரி ( அக்மார்க் அதிரைவாசி )

கல்யாணமாம் கல்யாணம்



கல்யாணமாம் கல்யாணம் மே ,ஜூன் , ஜூலை மாதங்களில் அதிரையில் அனைவரும் பேசிகொல்லுவது கல்யாணத்தை பற்றியே , இந்த வருட சீசனில் நுறு திருமனங்கள அல்லது நுற்றி ஐம்பது திருமனங்கள ௦௦ என்ற விவாதம் ஒருபக்கம் இருக்க, படித்தவன்,படிக்காதவன்,ஏழை,பணக்காரன் ,உள்நாட்டு வேலையுள்ளவன் ,வெளி நாட்டு வேலையுள்ளவனுகும் எந்தந்த மாதிரியான வரதட்சணை வாங்க வேண்டும் அவர்கள் தகுதிக்கு ஏற்றவாறு விளை பட்டியல் நம் குல பெண்களால் ஒரு பக்கம் வெளியிட படும்

மணமகளுக்கும் ஒரு பட்டியல் தயாரிக்கப்படும் அது ஒரே ஒரு கண்டிசன் வீடு உள்ளவல அல்லது பாதி  வீடு உள்ளவல அல்லது ஒன்றுமே இல்லதாவல ,இப்படியாக தரம் பிரிக்கப்பட்டு , பால் ,பழம்,ஹல்வா வங்கி கொண்டு நிச்சயம் செய்யப்படும், இரண்டு லட்சம் முதல் பத்து லட்சம் வரை ஹாட்  காஷ் ,இருவது ௦ லட்சம் முதல் ஐம்பது லட்சம் வரை ஒரு வீடு ,மிண்டும் ஒரு லட்சம் ஹாட்  காஷ் இதற்க்கு சீர் பணம் என்று சொல்லுவார்கள் , எல்லாவற்றையும் வாங்கி கொண்டு நிச்சயம் செய்யப்படும்

இறைவன் பெயராலும் அவன் தூதுவர் காட்டி தந்த வழியில் நாங்கள் கல்யாணம் செய்ய முடிவு செய்யதுவுள்ளோம் என்று 500 முதல் 1000௦௦௦ வரையிலான பத்திரிகை அச்சடிக்கப்பட்டு ஊர் முழுவதும் விநியோகம் செய்யப்படும் ஒரு வழியாக கல்யாணம் என்ற பாவச் செயல் முடிவுக்கு வரும்

150௦ கல்யாணம் இந்த சீசனில் நடந்துள்ளது என்ற விவாதம் முடிவுக்கு வந்தவுடன் அடுத்த விவாதம் அது என்ன சம்சுல் இஸ்லாம் சாமச்சரம்தான், 150 கல்யாணத்தில் எத்தனை விவாகரத்து அல்லது எத்தனை இழுபறி என்ற விவாதம் தொடங்கிவிடும்

 எதை எடுத்தாலும் ௫௦500 ருபாய்,, கடையை போல விவாகம் அனாலும் சரி விவாகரத்து அனாலும் சரி ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டணமாக வசூலித்து கொண்டு சான்றிதழ் வழங்குவதன் முலம் தங்கள் கடமை முடிந்தது என்று எண்ணுவதாக சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் மிது ஒரு குற்றச்சாட்டு உள்ளது

பட்டம் பயின்ற நிதிபதி அந்தஸ்துள்ள பல ஆலிம்கள் நமது ஊரில் இருந்தும் அரசியல் அந்தஸ்து உள்ளவர்கள் மட்டும் இந்த சங்கத்தின் உறுபினர்களாக இருப்பது வேதனைக்குரிய விஷயம் (சமிபத்தில் தேங்காய் வியாபாரிகளால் சித்தப்பா என்று அன்போடு அழைகபடுபவருக்கு பாராட்டு விழா நடத்த இச் சங்கம் முயன்றது சமுதாய சிங்கங்களின் கடும் போராட்தால் அந்த விழா நிறுத்தப்பட்டது இச் சம்பவத்தால் சம்சுல் இஸ்லாம் சங்கம் ஒரு அரசியல் சங்கமாக மாறிவருவதாக குற்றச்சாட்டும் எழுந்தது )


திருமணமாகத கன்னி பெண்கள் இருக்கும் சமுதாயமும் திருமணமாகியும் கன்னி பெண்களாக இருக்கும் சமுதாயம் நிச்சயமாக பெரும்கேடுகளை எதிர்நோக்கிய சமுதாயமே

அன்பு நேசங்களே குடும்ப வாழ்கையில் ஏற்படும் ஊடல் சண்டைகளை கூட புரிந்து கொள்ளாமல் எதற்கு எடுத்தாலும் விவாகரத்து வேண்டும் என்று சொல்லும் நம் சமூகத்தினருக்கு இஸ்லாம் காட்டி தந்த முறைப்படி திருமணம் என்றால் என்ன ? திருமண வாழ்கையை இஸ்லாம் எப்படி நமக்கு சொல்லித்தந்தது என்பவைகளை திருமணத்திற்கு முன் அந்தந்த முஹல்ல வசிகலளால் மணமகனுக்கும் மணமகளுக்கும் கலந்துரையாடல் நடத்தபடவேண்டும். முஹல்ல வாசிகளால் நடத்த முடியாது இது சாத்தியம் இல்லை என்றால் சமுதாய இயக்கங்கள் கோடை விடுமுறையில் மாணவர்களுக்க மார்க்க கலந்துரையாடல்கள் நடத்துவதை போல் நடத்தலாம்...திருமணம் செய்துகொள்ளும் மணமகன் மற்றும் மணமகள்
நிச்சயமாக ஒரு மணி நேரமாவது இந்த கலந்துரையடல்களில் கலந்து இருக்கவேண்டும் என்ற விதியை ஏற்படுத்தலாம்.

 அனைவருக்கும் சொந்தமான இயக்கமாக கருதப்படும் அதிரை பைத்துல்மாலுக்கு ஒரு வேண்டுகோளாகவே இந்த கட்டுரையை சமர்பிற்கிறேன்

நம் சமுதாய மறுமலர்ச்சிக்காக ஒன்றுபடுவோம் இறைவனின் உதவியால் வென்றுகாட்டுவோம்

யூசுப் எஸ்டஸ்



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சாமாதானமும் நிலவுவதாக...ஆமின்...

யூசுப் எஸ்டஸ் (Yusuf Estes), நம் தலைமுறையின் மிகச் சிறந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்களில் ஒருவர். மிக நகைச்சுவையாக பேசுபவர், அதே சமயம் கண்கலங்கவும் வைத்து விடுவார்.

மிக அழகிய முறையில் இஸ்லாத்தை எடுத்துச் சொல்வதில் வல்லவர். இவரால் இஸ்லாத்தை தழுவியோர் ஏராளமானோர். அல்ஹம்துலில்லாஹ்...

இவர் இஸ்லாத்தை தழுவிய விதம் பற்றி இவர் சொல்ல நான் கேட்ட சில தகவல்களை இந்த பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்...இன்ஷா அல்லாஹ்


யூசுப் எஸ்டஸ் அவர்கள் அமெரிக்காவின் டெக்சஸ் (Texas) மாகாணத்தை சேர்ந்தவர் (ஜார்ஜ் புஷ்சும் இந்த மாகாணத்தை சேர்ந்தவர் தான்). கிருத்துவ மத போதகராக இருந்தவர் (Preacher).

இவர் வாழ்வின் முக்கியமான மாற்றத்தை ஏற்ப்படுத்திய அந்த ஆண்டு 1991. யூசுப் எஸ்டஸ் அவர்கள் செல்வ செழிப்பான குடும்ப பின்னணியைக் கொண்டவர். இவரும் இவரது தந்தையும் பல தொழில்களை வெற்றிகரமாக நடத்திவந்தவர்கள். தொழிலை கவனித்துக்கொண்டே கிருத்துவத்தையும் போதித்து வந்தார். இறைபக்தி அதிகம் உடையவர்.

1991 ஆம் ஆண்டு, ஒரு வியாபார விஷயமாக எகிப்திலிருந்து வரும் முஹம்மது என்பரை சந்திக்க வேண்டிய நிர்பந்தம். அதுதான் அவர் வாழ்வை திருப்பிப்போட்ட சமயமும் கூட.

அப்போது வரை யூசுப் எஸ்டஸ் அவர்கள் இஸ்லாத்தை பற்றி எண்ணியிருந்தது ...

"முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள், பாலைவனத்தில் இருக்கும் ஒரு கருப்பு வடிவத்தை வணங்குபவர்கள், தினமும் ஐந்து முறை தரையை முத்தமிடுபவர்கள்...இது தான் இஸ்லாத்தை பற்றி நான் அறிந்திருந்தது"




"1991 ஆம் ஆண்டின் முற்பகுதி, எகிப்திலிருந்து வரும் முஹம்மது என்பவருடன் தாம் வியாபார ஒப்பந்தம் செய்யப் போவதாக என் தந்தை என்னிடம் கூறினார். என்ன முஸ்லிமுடனா?, நான் மறுத்து விட்டேன். ஆனால் என் தந்தை வேறு வழி இல்லையென்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.

இது வியாபாரம் என்பதால் என்னால் முஹம்மதை நிராகரிக்க முடியவில்லை. சரி அவருடன் சேர்ந்து பணியாற்றுவோம். உண்மையான என்னுடைய மார்க்கத்தையும் அவருக்கு போதிப்போம். இதுதான் நான் முதலில் நினைத்தது...

நான் அவரை சந்திக்க தயாரானேன். ஏசு என் கடவுள் (Jesus is my Lord) என்று எழுதப்பட்டிருந்த ஒரு தொப்பியை அணிந்துக்கொண்டு, கழுத்தில் ஒரு பெரிய சிலுவையை அணிந்து கொண்டு, கையில் பைபிளை வைத்துக்கொண்டு அவரை வரவேற்க காத்திருந்தேன்.

முஹம்மதும் வந்தார். நான் அதிக நேரம் வீணாக்கவில்லை...

உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா?


ஆம்...

ஆச்சர்யமான பதில். நான் தொடர்ந்தேன். இப்ராகிம்(அலை), இசாக்(அலை), இஸ்மாயில்(அலை) என்று பைபிளில் இருக்கும் நபிமார்களிடம் இருந்து ஆரம்பித்தேன். அதன் பிறகு நான் பலமுறை அவருடன் என் மார்க்கத்தை பற்றி பேசியிருக்கிறேன், விவாதித்திருக்கிறேன். அப்போதெல்லாம் நான் தான் வென்றதாக நினைப்பேன். ஆனால் இன்றோ, அதைப் பற்றியெல்லாம் நினைக்கும் போது, உண்மையில் முஹம்மது தான் வென்றார் என்பது புரிகிறது.

முஹம்மதின் பண்புகள் என்னை மிகவும் கவர்ந்தன. முஹம்மதை அவர் வழியில் விட்டுவிடுமாறு என் தந்தை என்னிடம் கூறினார். என்ன, இப்படி ஒரு பண்புள்ளவர் ஒரு தவறான கொள்கையில் இருப்பதா? இல்லை.. இவரை எப்படியாவது என் மதத்திற்கு அழைத்து வருவேன்.

இதற்கு நான் முதலில் செய்தது, அவரை என் வீட்டிலேயே குறைந்த வாடகைக்கு தங்க வருமாறு அழைத்தது. பணம் முக்கியமல்ல, அவருக்கு நான் கொடுக்கக் கூடிய போதனை தான் முக்கியம். முஹம்மதும் எங்களுடன் தங்க ஒப்புக்கொண்டார்.

இது நடந்து கொண்டிருந்த அதே வேலையில், என்னுடைய நண்பரான மதகுரு ஒருவர்(Priest, father) மாரடைப்பு காரணமாக மருத்துவமைனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை தினமும் சென்று சந்தித்து வருவேன். அப்போது அந்த அறையில் தங்கிருந்த பாதர் பீட்டர் ஜகோப்ஸ் (Father Peter Jacobs) அவர்கள் எனக்கு நன்கு பழக்கமானார். அவரும் மாரடைப்பு காரணமாக தான் அந்த மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

நலமாகி வந்தவுடன் அவரை என்னுடன் வந்து வசிக்குமாறு கேட்டுக்கொண்டேன். அவரும் எங்களுடன் வசிக்க சம்மதித்தார்.

இதுதான் நான் எதிர்பாத்த நேரம். மாட்டினார் முஹம்மது. இப்போது ஒரே வீட்டில் நான், என் மனைவி, என் தந்தை மற்றும் பாதர் பீட்டர் ஜகோப்ஸ், எல்லோரும் கிருத்துவத்தை பற்றி நன்கு அறிந்தவர்கள். இனி முஹம்மதை எங்கள் வழிக்கு கொண்டு வந்து விடவேண்டியதுதான்.

ஒவ்வொரு நாளும், இரவு உணவின் போது நாங்கள் அனைவரும் முஹம்மதை சுற்றி அமர்ந்து கொள்வோம். கேள்விகளை தொடுப்போம்.

பல கேள்விகள்...

நாங்கள் அனைவரும் ஒவ்வொரு விதமான பைபிளை வைத்திருப்போம், உதாரணத்துக்கு நான் RSV (Revised Standard version) பைபிள், என் தந்தை கிங் ஜேம்ஸ் பதிப்பு (King James version) பைபிள் என்று பல பைபிள்கள்"

கிருத்துவத்தை பற்றி தெரியாதவர்களுக்கு, இங்கு ஒரு தகவல். கத்தோலிக்க கிருத்துவர்களின் பைபிள் 73 புத்தகங்களை கொண்டது. protestant கிருத்துவர்களின் பைபிள் 66 புத்தகங்களை கொண்டது.

"ஆனால் முஹம்மதோ ஒரே ஒரு புத்தகத்தை கொண்டு வந்து வைத்தார். அது கடவுளிடமிருந்து வந்தது என்றும், அன்றிலிருந்து இன்றுவரை மாற்றமடையாதது என்றும் கூறினார். இது எனக்கு ஆச்சர்யமான தகவல்கள்.

பிறகு ஒருமுறை திரித்துவத்தை (Trinity, it is nothing but a christian belief that teaches the unity of Father, Son, and Holy Spirit as three persons in one Godhead). பற்றி விவாதம் திரும்பியது. முஹம்மது, திருத்துவத்தை லாஜிக்காக நிரூபியுங்கள் என்று கேட்டார்...

என்ன லாஜிக்கா? மதம் என்பது நம்பிக்கை சம்பந்தப்பட்டது, இங்கு லாஜிக்கெல்லாம் பார்க்ககூடாது...

எங்கள் மார்க்கத்தில் இரண்டும் உண்டு....

இது போன்ற பதில்கள் தான் எங்களை திக்குமுக்காட செய்தன... நான் வீம்புக்காக அவருடன் வாதம் செய்துகொண்டிருந்தேன், ஆனால் அவருடைய பதில்களில்தான் அதிகம் அர்த்தமிருந்தது...இப்படியே சில நாட்கள் சென்றன..

ஒருமுறை பாதர் பீட்டர் ஜகோப்ஸ் அவர்கள், முஹம்மதிடம், தன்னை மசூதிக்கு அழைத்து செல்லுமாறு கேட்டுக்கொண்டார். சென்று வந்த அவரிடம்...

பாதர்...அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? பலி கொடுத்து இறைவனை வணங்கி கொண்டிருந்தார்களா?

இல்லை..அப்படியெல்லாம் ஒன்றுமில்லை...வந்தார்கள், தொழுதார்கள், சென்றுவிட்டார்கள்...


என்ன அவ்வளவுதானா....எந்த மாதிரி பாடல்களை பாடினார்கள்? எந்த மாதிரி இசைக்கருவிகளை வைத்திருந்தார்கள்?

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை?

என்ன இசைக்கருவிகள் இல்லாமல் கடவுள் வழிப்பாடா?

இவையெல்லாம் எனக்கு வியப்பை தரும் தகவல்கள். முஸ்லிம்களின் கடவுள் வழிபாடு என்பது மிகவும் எளிதான, வலிமையான ஒன்று என்பதை புரிந்துக்கொண்டேன்.

இஸ்லாம் என்னை நெருங்கி வந்துக்கொண்டே இருந்தது. இப்போது என் மதத்தில் பல கேள்விகளை கேட்க ஆரம்பித்தேன்...

சில தினங்களுக்கு பிறகு, பாதர் பீட்டர் ஜகோப்ஸ் அவர்கள் மறுபடியும் முகம்மதுடன் மசூதிக்கு சென்றார். அவருக்காக நான் காத்திருந்தேன். இந்த முறை என்ன புது செய்தி கொண்டுவருவார் என்று பார்ப்பதற்காக.

கார் வந்தது, இருவர் இறங்கினார்கள். ஒருவர் முஹம்மது, அது எனக்கு நன்றாகவே தெரிந்தது, யார் அந்த மற்றொருவர்?, நீண்ட ஆடையுடன், தலையில் குல்லா அணிந்துக்கொண்டு, யாரவர்?...

உற்று கவனித்தேன்....என்னால் நம்பமுடியவில்லை...பாதர் பீட்டர் ஜகோப்ஸ்சா அது? ஆம் அவரேதான்...என்ன, அவர் இப்போது முஸ்லிமா? அமெரிக்கா, மெக்ஸிகோ என்று நாடு நாடாக சென்று கிருத்துவத்தை போதித்தாரே, அவரா இவர்? அதிர்ச்சியில் உறைந்தேன்.




பாதர் பீட்டர் ஜகோப்ஸ் அவர்கள் என்னிடம் வந்தார்,

நிச்சயமாக இறைவன் ஒருவனே என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது தூதரென்றும் நான் சாட்சியம் கூறுகிறேன்...

நான் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. என்னிடத்தில் பெரும் பாதிப்பை ஏற்ப்படுத்தியது அது.

மாடியில் இருந்த என் மனைவியிடம் சென்றேன்.

கவனித்தாயா?, இப்போது பாதர் பீட்டர் ஜகோப்ஸ் ஒரு முஸ்லிம். இஸ்லாமிய மார்க்கம் நான் நினைத்தது போல் இல்லை, அது எனக்கு நல்ல மார்க்கமாகவே படுகிறது.

எனக்கு உங்களிடமிருந்து விவாகரத்து வேண்டும்...

ஹேய்... இரு............ ......இரு........ ......... .நான் சொன்னதை தவறாக எடுத்துக்கொண்டாயா? நான் முஸ்லிமாகவில்லை, அவர்தான் முஸ்லிம். நான் இன்னும் கிருத்துவன் தான். அப்படியே நான் முஸ்லிமாகினாலும் நீ என்னுடன் தாராளமாக வாழலாம், ஏனென்றால் ஒருமுறை முஹம்மது சொல்ல கேட்டிருக்கிறேன், இஸ்லாமில் ஒரு முஸ்லிம் ஆண் ஒரு கிருத்துவ பெண்ணை திருமணம் செய்யலாம். ஆனால் ஒரு முஸ்லிம் பெண்தான் கிருத்துவ ஆணை திருமணம் செய்யக்கூடாது...

அதனால் தான் கேட்கிறேன் எனக்கு விவாகரத்து வேண்டுமென்று...

என்ன?

ஆம், முஸ்லிம் பெண்ணாகிய என்னால் கிருத்துவ ஆணாகிய உங்களுடன் வாழ முடியாது...

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி...நான் நிதானத்திலேயே இல்லை...சிறிது நேரத்தில் சுதாரித்துக்கொண்டேன்...

இரு...அவரசப்படாதே, உன்னிடம் ஒன்றை நான் சொல்ல வேண்டும். இஸ்லாம் எப்போதோ என் மனதில் வந்து விட்டது. நானும் முஸ்லிம்தான்..

என் மனைவி என்னை நம்பவில்லை.

ஏன் இப்படி மாற்றி மாற்றி பேசுகிறீர்கள், தயவு செய்து இங்கிருந்து வெளியேறிவிடுங்கள்...

நான் வெளியே வந்து விட்டேன். ஒன்றும் புரியவில்லை. ஒரே குழப்பம். தூக்கம் சரிவர வரவில்லை. எழுந்து சென்று முஹம்மதை எழுப்பி வெளியே அழைத்து சென்றேன். ஏதேதோ பேசுகிறேன் அவரிடம், ஒன்றும் புரியாமல்... இப்போதும் அவர் பொறுமையாகவே பேசினார், விளக்கினார்.

சுப்ஹு நேரம் நெருங்கி விட்டது, முகம்மதுடன் நானும் பள்ளிக்கு சென்றேன். அந்த பிளைவூட் தரையில் சஜிதா செய்தேன்.

இறைவா எனக்கு நல்வழி காட்டு....

இருவரும் வீட்டிற்கு வந்தோம். முஹம்மது மற்றும் பீட்டர் ஜகோப்ஸ் அவர்கள் முன்னிலையில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன். நான் சஹாதா சொன்ன சிறிது நேரத்தில் என் மனைவியும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். சுபானல்லாஹ்...

என் தந்தையிடம் விஷயத்தை சொன்னேன்.

நான்தான் அப்போதே கூறினேனே இஸ்லாம் ஒரு அழகிய மார்க்கமென்று. எனக்கு நீ இஸ்லாத்தில் இணைந்தது மகிழ்ச்சிதான்.

dad,..... அப்போ நீங்கள்?

இந்த கேள்விக்கு அவரிடமிருந்து பதில் வரவில்லை. மாதங்கள் சென்றன. எப்போதும் என்னை மசூதியில் விட வரும் என் தந்தை சில நாட்களாக என்னுடன் சேர்ந்து தொழ ஆரம்பித்தார்.

பலரும் என்னிடம் வந்து கேட்க ஆரம்பித்தனர்...

எப்பொழுது உங்கள் தந்தை இஸ்லாத்தை தழுவினார்?

நான் விளக்கமளித்தேன். ஒரு சமயத்தில் இந்த கேள்விகள் அதிகமாகவே, நான் அவர்களிடம்,

நீங்கள் ஏன் அவரிடமே இந்த கேள்வியை கேட்கக்கூடாது?

அவர்கள் அவரிடம் சென்று அந்த கேள்வியை கேட்டனர்...

அவர் கூறினார் "கடந்த ஒரு வருடமாக...."

சுபானல்லாஹ்...நான் இப்போது, நடந்ததையெல்லாம் திரும்பி பார்க்கிறேன். ஆம் முஹம்மது வென்றுவிட்டார். ஆனால் நானும் வென்றுவிட்டேன். இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதினால்..."

யூசுப் எஸ்டஸ் அவர்களுடைய இந்த வரலாற்றை அவர் சொல்ல நீங்கள் கேட்க வேண்டும். மிகுந்த நகைச்சுவையுடனும், அதே சமயம் உணர்ச்சிபூர்வமாகவும் சொல்லுபவர்.

இப்போது யூசுப் எஸ்ட்ஸ் அவர்கள் பல்வேறு நாடுகளுக்கும் சென்று பலரையும் இஸ்லாத்தில்பால் அழைத்து வருகிறார். சென்னைக்கும் ஒருமுறை வந்திருக்கிறார். பல இணையதளங்களை நடத்திவருகிறார்.

இறைவன் இவருக்கு தொடர்ந்து நல்ல உடல் நலத்தையும், மன நலத்தையும் கொடுப்பானாக...ஆமின்

இவருக்கு ஒரு செல்லப்பெயர் உண்டு...அது "ATHEIST KILLER" என்பது...ஏன்? இவரது சில வீடியோக்களை பார்த்தால் தெரியும்...

இறைவன் நம் எல்லோருக்கும் நல்வழி காட்டுவானாக...ஆமின்...

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

--(ஈமெயில் முலம் கிடைக்கபெற்ற இந்த பதிவு யார் எழுதியது என்று தெரியவில்லை)

வைரமுத்து கவிதைகள்

அம்மாவுக்குமுதல் கவிதை


ஆயிரம்தான் கவிசொன்னேன்
அழகழகாய்ப் பொய் சொன்னேன்
பெத்தவளே ஓம்பெருமை
ஒத்தைவரி சொல்லலையே!

எழுதவோ படிக்கவோ
ஏலாத தாய்பத்தி
எழுதியென்ன லாபமென்று
எழுதாமல் போனேனோ?

பொன்னையாதேவன் பெற்ற
பொன்னே குலமகளே
என்னைப் புறந்தள்ள
இடுப்புவலி பொறுத்தவளே

வைரமுத்து பிறப்பான்னு
வயிற்றில்நீ சுமந்ததில்லை
வயிற்றில்நீ சுமந்தஒண்ணு
வைரமுத்து ஆயிடுச்சு

கண்ணுகாது மூக்கோடை
கறுப்பா ஒருபிண்டம்
இடப்பக்கம் கிடக்கையிலை
என்னென்ன நினைச்சிருப்ப?

கத்தி எடுப்பவனோ?
களவாடப் பிறந்தவனோ?
தரணியாள வந்திருக்கும்?
தாசில்தார் இவன்தானோ?

இந்த விபரங்கள்
ஏதொண்ணும் தெரியாமை
நெஞ்சூட்டி வளத்தஉன்னை
நினைச்சா அழுகைவரும

கதகதெண்ணு கழிக்கிண்டி
கழிக்குள்ளை குழிவெட்டி
கருப்பெட்டி நல்லெண்ணை
கலந்து தருவாயே

தொண்டையிலை அதுஇறங்கும்
சுகமான இளஞ்சூடு
மண்டையிலை இன்னும்
மசமசன்னு நிக்குதம்மா

கொத்தமல்லி வறுத்துவச்சுக்
குறுமொளகா ரெண்டுவச்சு
சீரகமும் சிறுமொளகும்
சேத்துவச்சு நீர்தெளிச்சு

கும்மி அரச்சு நீ
கொழகொழன்னு வழிக்கையிலே
அம்மி மணக்கும்
அடுத்ததெரு மணமணக்கும்

தித்திக்கச் சமைச்சாலும்
திட்டிகிட்டே சமைச்சாலும்
கத்தரிக்காய் நெய்வடியும்
கருவாடு தேனொழுகும்

கோழிக் கொழம்புமேல
குட்டிகுட்டியா மிதக்கும்
தேங்காய்ச் சில்லுக்கு
தேகமெல்லாம் எச்சிஊறும்

வறுமையில நாமபட்ட
வலிதாங்க மாட்டாம
பேனா எடுத்தேன்
பிரபஞ்சம் பிச்செறிஞ்சேன்!

பாசமுள்ள வேளையில
காசுபணம் கூடலையே!
காசுவந்த வேளையிலே
பாசம்வந்து சேரலையே!

கல்யாணம் நான் செஞ்சு
கதியத்து நிக்கையிலே
பெத்தஅப்பன் சென்னைவந்து
சொத்தெழுதிப் போனபின்னே

அஞ்சாறு வருசம்உன்
ஆசமொகம் பாக்காமப்
பிள்ளைமனம் பித்தாச்சே
பெத்தமனம் கல்லாச்சே

படிப்புப் படிச்சுக்கிடே
பணம் அனுப்பி வச்சமகன்
கைவிட மாட்டான்னு
க்டைசியில நம்பலையே!

பாசம் கண்ணீரு
பழையகதை எல்லாமே
வெறிச்சோடிப் போன
வேதாந்த மாயிருச்சே!

வைகையிலை ஊர்முழுக
வல்லாரும் சேர்ந்தொழுக
கைப்பிடியாக் கூட்டிவந்து
கரைசேத்து விட்டவளே

எனக்கொன்னு ஆனதுன்னா
உனககுவேற பிள்ளையுண்டு
உனக்கொண்ணு ஆனதுன்னா
எனக்குவேற தாயிருக்கா?