அதிரை பைத்துல்மாலுக்கு டைரியின் கேள்விகள்
பிரம்மாண்டமான திருக்குர் ஆன் மாநாட்டை வருடந்தோரும் நடத்தி வரும் அதிரை பைத்துல்மால் மற்ற ஊர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவதை யாராலும் மறுக்கவோ அல்லது மறைக்கவோ இயலாது. ஏழை எழிய மக்களுக்கும் மாணவர்களுக்கும் அதிரை பைத்துல்மால் செய்துவரும் தொண்டு பாராட்டக்குரியது(எல்லாப் புகழும் இறைவனுக்கே!). இத்தொண்டு நிர்வனத்தார் மீது எனக்குள் எழுந்துள்ள கேள்விகளை இங்கு தொகுத்துள்ளேன்.

1) ஆஸ்பத்திரி தெருவில் இந்த நிர்வனத்திற்கு சொந்தமான போதிய இடவசதியுள்ள அலுவலகம் இருந்தும் நடுத்தெருவில் மீண்டும் எந்தவொரு வருவாயும் இல்லாத மற்றுமொரு அலுவலகம் அமைக்க அவசியமென்ன?
2) புதிதாக இஸ்லாத்தை தழுவி நமது ஊருக்கு வரும் சகோதரர்களுக்கு சிறு வியாபாரம் தொடங்குவதற்கு கூட எந்தவொரு நிதியுதவி செய்வதற்கு எந்தவொரு தொண்டு நிர்வனமும் முன் வருவதில்லை என மரைக்கா பள்ளியில் கூடும் இளம் உலமாக்களின் கேள்விகளுக்கு நிர்வனத்தாரின் பதில் என்ன?

3) வட்டியில்லா கடன் மூலம் நகை அல்லது சொத்துக்களின் மீது கடன் வழங்கும் அதிரை பத்துல்மால் எந்தவொரு வசதியில்லாத ஏழைகளுக்கு பரம்பரை பரம்பரையாக நமதூர் மண்ணில் வாழ்ந்து வரும் குடும்பத்தாருக்கு கடன்கொடுக்க மறுப்பது ஏன்?

4) வட்டியை ஒழிப்பதற்காக தொடங்கப்பட்ட இந்நிர்வனம் இருந்தும் புதுக்கோட்டையிருந்து வரும் ஃபைனான்சியர்கள் சுவற்றின்மீது ஏறி நமது சகோதிரிகளிடம் வட்டியை வசூல் செய்யும் நிலைமைக்கு தள்ளப்பட்டக் காரணம் என்ன? இதைப்பற்றிய உங்களுடைய ஆய்வு அல்லது சொலூஷன்/கன்குலூஷன் தான் என்ன?

5) அதிரை பைத்துல்மாலின் ஆண்டு வரவு சிலவு அறிக்கை, நீங்கள் செய்துவரும் நற்காரியங்கள் என்ன, அடுத்தக்கட்ட திட்டங்கள் என்ன போன்ற விபரங்கள் எந்த இணையதலத்தில் பதியப்பட்டுள்ளது அல்லது ஆண்டு அறிக்கை புத்தகமாக வெளியிடப்படுகிறதா என்பதை தெரியப்படுத்தினால் என்னை போன்று கேள்வி எழுப்புவோர்களுக்கு உங்களுடன் சேர்ந்து நற்காரியங்களில் ஈடுபடுவதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக!
-Diary

2 comments:

Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும். டைரி அவர்களுக்கு! உங்களின் ப்லாக்கை பார்த்தேன். மிக்க நன்றி. வழி கெட்டவர்களின் வரிசையில் இன்னொரு பிரிவையும் விட்டு விட்டீர்கள். அவர்கள் தான் மூஅதாஜிலா.

மேலும் விவரங்களுக்கு இந்த இணைய தளத்தை பாருங்கள். சகோதரரே! நான் அறுதியிட்டு சொல்வேன் ஸலஃபிய்யாஹ் தான் சரியான வழிமுறை என்று!

சகோதரரே நீங்கள் ஆழமாக ஆராய்ந்தால் விளங்கும் இன்று நம்மில் உள்ள பல இயக்கங்கள் , ஜமாத்கள் , அத்தனையும் வழிகெட்ட இஹ்வானி ,ஸூஃபி ,முஅதzஇலா கொள்கையின் அடிப்படையில் உள்ளவர்களே என்று.

சகோதரரே நினைவில் கொள்ளுங்கள்! முஸ்லிம் ஆட்சியாளரை எதிர்த்து கிளர்ச்சி செய்வது எந்த நிலையிலும் ஒரு முஸிலிமுக்கு ஆகுமானதல்ல. நினைவில் கொள்ளுங்கள்! ஸூஃபி கொள்கை என்பது வழிகேடே.

நான் உங்களுக்கு ஸலஃபிய்யாஹ் பற்றி மேல் அதிக விவரங்கள் தர தயாராக உள்ளேன். நீங்கள் என்னுடைய ஈமெயில் முகவரியில் தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம்.

இன்ஷா அல்லாஹ் மீண்டும் சந்திப்போம். அஸ்ஸலாமு அலைக்கும்.

Unknown said...

*மேலும் விவரங்களுக்கு இந்த இணைய தளத்தை பாருங்கள். http://www.darsalaf.tamil.googlepages.com/