கல்யாணமாம் கல்யாணம்



கல்யாணமாம் கல்யாணம் மே ,ஜூன் , ஜூலை மாதங்களில் அதிரையில் அனைவரும் பேசிகொல்லுவது கல்யாணத்தை பற்றியே , இந்த வருட சீசனில் நுறு திருமனங்கள அல்லது நுற்றி ஐம்பது திருமனங்கள ௦௦ என்ற விவாதம் ஒருபக்கம் இருக்க, படித்தவன்,படிக்காதவன்,ஏழை,பணக்காரன் ,உள்நாட்டு வேலையுள்ளவன் ,வெளி நாட்டு வேலையுள்ளவனுகும் எந்தந்த மாதிரியான வரதட்சணை வாங்க வேண்டும் அவர்கள் தகுதிக்கு ஏற்றவாறு விளை பட்டியல் நம் குல பெண்களால் ஒரு பக்கம் வெளியிட படும்

மணமகளுக்கும் ஒரு பட்டியல் தயாரிக்கப்படும் அது ஒரே ஒரு கண்டிசன் வீடு உள்ளவல அல்லது பாதி  வீடு உள்ளவல அல்லது ஒன்றுமே இல்லதாவல ,இப்படியாக தரம் பிரிக்கப்பட்டு , பால் ,பழம்,ஹல்வா வங்கி கொண்டு நிச்சயம் செய்யப்படும், இரண்டு லட்சம் முதல் பத்து லட்சம் வரை ஹாட்  காஷ் ,இருவது ௦ லட்சம் முதல் ஐம்பது லட்சம் வரை ஒரு வீடு ,மிண்டும் ஒரு லட்சம் ஹாட்  காஷ் இதற்க்கு சீர் பணம் என்று சொல்லுவார்கள் , எல்லாவற்றையும் வாங்கி கொண்டு நிச்சயம் செய்யப்படும்

இறைவன் பெயராலும் அவன் தூதுவர் காட்டி தந்த வழியில் நாங்கள் கல்யாணம் செய்ய முடிவு செய்யதுவுள்ளோம் என்று 500 முதல் 1000௦௦௦ வரையிலான பத்திரிகை அச்சடிக்கப்பட்டு ஊர் முழுவதும் விநியோகம் செய்யப்படும் ஒரு வழியாக கல்யாணம் என்ற பாவச் செயல் முடிவுக்கு வரும்

150௦ கல்யாணம் இந்த சீசனில் நடந்துள்ளது என்ற விவாதம் முடிவுக்கு வந்தவுடன் அடுத்த விவாதம் அது என்ன சம்சுல் இஸ்லாம் சாமச்சரம்தான், 150 கல்யாணத்தில் எத்தனை விவாகரத்து அல்லது எத்தனை இழுபறி என்ற விவாதம் தொடங்கிவிடும்

 எதை எடுத்தாலும் ௫௦500 ருபாய்,, கடையை போல விவாகம் அனாலும் சரி விவாகரத்து அனாலும் சரி ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டணமாக வசூலித்து கொண்டு சான்றிதழ் வழங்குவதன் முலம் தங்கள் கடமை முடிந்தது என்று எண்ணுவதாக சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் மிது ஒரு குற்றச்சாட்டு உள்ளது

பட்டம் பயின்ற நிதிபதி அந்தஸ்துள்ள பல ஆலிம்கள் நமது ஊரில் இருந்தும் அரசியல் அந்தஸ்து உள்ளவர்கள் மட்டும் இந்த சங்கத்தின் உறுபினர்களாக இருப்பது வேதனைக்குரிய விஷயம் (சமிபத்தில் தேங்காய் வியாபாரிகளால் சித்தப்பா என்று அன்போடு அழைகபடுபவருக்கு பாராட்டு விழா நடத்த இச் சங்கம் முயன்றது சமுதாய சிங்கங்களின் கடும் போராட்தால் அந்த விழா நிறுத்தப்பட்டது இச் சம்பவத்தால் சம்சுல் இஸ்லாம் சங்கம் ஒரு அரசியல் சங்கமாக மாறிவருவதாக குற்றச்சாட்டும் எழுந்தது )


திருமணமாகத கன்னி பெண்கள் இருக்கும் சமுதாயமும் திருமணமாகியும் கன்னி பெண்களாக இருக்கும் சமுதாயம் நிச்சயமாக பெரும்கேடுகளை எதிர்நோக்கிய சமுதாயமே

அன்பு நேசங்களே குடும்ப வாழ்கையில் ஏற்படும் ஊடல் சண்டைகளை கூட புரிந்து கொள்ளாமல் எதற்கு எடுத்தாலும் விவாகரத்து வேண்டும் என்று சொல்லும் நம் சமூகத்தினருக்கு இஸ்லாம் காட்டி தந்த முறைப்படி திருமணம் என்றால் என்ன ? திருமண வாழ்கையை இஸ்லாம் எப்படி நமக்கு சொல்லித்தந்தது என்பவைகளை திருமணத்திற்கு முன் அந்தந்த முஹல்ல வசிகலளால் மணமகனுக்கும் மணமகளுக்கும் கலந்துரையாடல் நடத்தபடவேண்டும். முஹல்ல வாசிகளால் நடத்த முடியாது இது சாத்தியம் இல்லை என்றால் சமுதாய இயக்கங்கள் கோடை விடுமுறையில் மாணவர்களுக்க மார்க்க கலந்துரையாடல்கள் நடத்துவதை போல் நடத்தலாம்...திருமணம் செய்துகொள்ளும் மணமகன் மற்றும் மணமகள்
நிச்சயமாக ஒரு மணி நேரமாவது இந்த கலந்துரையடல்களில் கலந்து இருக்கவேண்டும் என்ற விதியை ஏற்படுத்தலாம்.

 அனைவருக்கும் சொந்தமான இயக்கமாக கருதப்படும் அதிரை பைத்துல்மாலுக்கு ஒரு வேண்டுகோளாகவே இந்த கட்டுரையை சமர்பிற்கிறேன்

நம் சமுதாய மறுமலர்ச்சிக்காக ஒன்றுபடுவோம் இறைவனின் உதவியால் வென்றுகாட்டுவோம்

10 comments:

Yasir said...

//திருமணத்திற்கு முன்மணமகனுக்கும் மணமகளுக்கும் கலந்துரையாடல் நடத்தபடவேண்டும்/// i am 1000% agree with you diary..this is called ISLAM

Adirai khalid said...

அன்புள்ள சகோதரர் (டைரி) அவர்களுக்கு .,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

தங்களுடைய கட்டுரையை உள்நோக்கி சென்று பயனித்து பார்த்தேன் உன்மையில் நமது ஊரின்
நடைபெரும் திருமணம் என்ற பெயரால் நடைபெறும் நாடைமுறை அவலங்களை மிக அழகாக படம் பிடித்து காட்டியிருக்கிண்றீர்கள்

சாதாரன குடும்பத்தில் பெண் செல்வங்களை பெற்றவர்கள் அவர்களை மனமுடித்துக் கொடுக்க படும் அவசஸ்த்தைககளை பார்க்கும்பொழுது வெந்த புண்ணில் ‍‍‍‍__ந்தை பாய்ச்சும் விந்தை மனிதர்கள் தான் அதிகமாக தெறிகிரார்கள்.

எத்துனை விழிப்புணர்ச்சி இயக்கங்கள், ஆலீம்கள் உருவானாலும் அவர்களே இந்த அவலங்களுக்கு
நேறிடையாக்வோ அல்லது மறைமுகமாகவோ துணைப் போகும் பொழுது நாம் என்னத்த சொல்ல .,

மேலும் நீங்கள் குற்றம் சுமத்தும் சங்கங்கள் காலம் காலமாக கல்யாண வரி வசூலிக்கும் நிருவனமாக திகழ்வதை அறிய முடிகின்றது., இதர்க்கு அனுமதி கொடுத்தது யார் ? இஸ்லாம் இந்த வரி வசூலை அனுமதிக்கின்றதா இல்லை அரசு அனுமதி கொடுத்ததா ? மக்கள் ஏன் இதை சிந்திக்க தவறுகின்றார்கள்

சரி இந்த தண்டத்தை கட்டிவிடுவோம் ஊர்மக்கலோடு ஒத்துபோவோம் என்று பார்த்தல் பொதுநலம் என்றபோர்வையில் அவர்கள் நியாயத்திற்கு எதிராக செய்யும் அட்டுழியம் ஹக்களிகளுக்கு எதிராக செய்யும் அநியாயம் போன்றவைகளுடன் ., விவகாரத்தில் முறையற்ற இழுபறியையும் ., தனக்கு சம்பந்த பட்டவர்களுக்கு சாதக தீர்ப்பு., திருமண முரிவில் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என்று அறி பரி போன்றவைகள் நடைபெறத்தான் செய்கின்றது இதுபோன்ற நிகழ்வுகளால் சங்கங்களுக்குத் தானே இலாபம் ஏனெனில் இரண்டாம் தடவையோ அல்லது மூன்றம் தடவையோ திருமணம் செய்தால் கல்யாண வரி கிடைக்குமே !

வருடா வருடம் இச் சங்களுக்கு குறைந்தது 100 திருமண மாவது நடக்க வாய்ப்பு இருகிண்றது இதையெல்லாம் கணக்கிட்டால் இதுநாள் வரைக்கும் கோடிக்கணக்கில் அவர்களிடம் கையிருப்புகள் அல்லது சொத்தோ இருக்க வேண்டும்,

சங்கங்களின் (AS A Public TRUST ) அமைப்பு விதி சட்டத்தில் வாருடா வருடம் இது போன்ற சங்கங்களின் வரவு செலவு, சொத்து விவரங்களை அரசிடம் சமர்பிக்க வேண்டும் மேலும் அமைப்பு விதியில் இதை அரசிடம் சமர்பிக்கும் முன்னர் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கவேண்டும் இதை இச்சங்கங்கள் செவ்வனே செய்யும் என நினைக்கிண்றேன்

மேலும் இதுபோன்ற சங்கங்கள் சமுகத்தில் மலிந்து கிடக்கும் சீர்கேடுகளை பெண்வீட்டாருக்கு எதிராக வாங்கப்படும் வரதச்சினை ., சீர் சீரட்டுகள் போன்ற சீர்கேடுகளை
களைய முற்படாத வரை இதுபோன்ற சங்ககளை பற்றி கவலைபட தேவை இல்லை. கல்யாணம் போன்ற நிகழ்வுகள் நடக்கும்பொழுது இச் சங்கங்களை இவற்றை purakaniththaal மிக அவசியம்
இதுபோன்ற சங்களின் அராஜக போக்கால்தான் தமிழக அரசும் கட்டாய பதிவு திருமணம் செய்ய வலியுறுத்துகின்றது இந்த அரசின் அறிவிப்பு தனி மனிதனுக்கு சாதகமோ அல்லது பாதகமோ தெரியாது ஆனால் இது போன்ற கட்டப் பஞ்சாயத்து செய்யும் முறையற்ற சங்கங்களுக்கு எச்சரிக்கையே என்று பொதுநல நோக்கர்கள் கருதுகின்றார்கள்

சில பிரச்சினைகள், வழக்குகள் சங்கத்தினர் பார்வைக்கு அல்லது தீர்வுக்கு வரும்பொழுது அதை மற்ற உறுப்பினர்களுக்குட மேலும் தெரிவிக்காமல் வாதி அல்லது பிரதி வாதிகளின் சாட்சிகள் இல்லாமல்விசாரித்து ஒரு சிலரோ தங்களுக்குள் தீர்வை தீர்மானித்து சாதக / பதாக தீர்ப்பை வழங்கு கின்றனர். இதனால் இது போன்ற
சங்கங்களின் மேல் உள்ள நம்பிக்கையை சாதாரண மக்களிடமிருந்து இழந்து வருவதை அறியலாம்

இன்னும் எழுத நிறைய இருக்கின்றது இன்ஷா அல்லாஹ் முயற்சிக்கின்றேன்

Diary said...
This comment has been removed by the author.
Diary said...

சகோதரர் யாசிர் அவர்களுக்கு

முதன் முறையாக எனது வலைப்பூவுக்கு வந்தமைக்கு நன்றி .எது செய்தாலும் கலந்துரையாடல் அமைத்து அதன் முடிவுக்கு ஏற்றவாறு செயல்பட உலகம் துவங்கியுள்ளது ..வாழ்க்கையின் அடித்தளமான திருமணத்துக்கும் முன் நிச்சயம் மணமகனுக்கும் மணமகளுக்கும் கலந்துரையாடல் அல்லது கவுன்சலிங் நடத்துவதின் அவசியத்தை தங்கள் ஆதரித்ததை போல் அனைவரும் ஆதரிக்கவேண்டும் என்பதே எனது கருத்தும்

Diary said...

அன்புச் சகோதரர் மு .அ. ஹாலித் அவர்களே

சாலம் வரஹமதுல்லாஹ்
முதன் முறையாக எனது வலைப்பூவுக்கு வந்தமைக்கு நன்றி

// நாடைமுறை அவலங்களை மிக அழகாக படம் பிடித்து காட்டியிருக்கிண்றீர்கள்//

ஒரு மாணவன் தான் எழுதிய பரிட்சையின் முடிவை தன் ஆசிரியர் பாராட்டும் பொழுது எப்படி பூரிப்பு அடைவானோ அப்படி நானும் பூரிப்பு அடைந்துள்ளேன் , தங்களை போன்ற மூத்த எழுத்தாளர்களின் ஊக்கம் எம்மை மிண்டும் மிண்டும் எழுத தோன்றிகிறது

//மேலும் நீங்கள் குற்றம் சுமத்தும் சங்கங்கள் காலம் காலமாக கல்யாண வரி வசூலிக்கும் நிருவனமாக திகழ்வதை அறிய முடிகின்றது., இதர்க்கு அனுமதி கொடுத்தது யார் ? இஸ்லாம் இந்த வரி வசூலை அனுமதிக்கின்றதா இல்லை அரசு அனுமதி கொடுத்ததா ? மக்கள் ஏன் இதை சிந்திக்க தவறுகின்றார்கள்//

மக்கள் விழிப்புணர்வு அடைந்தால் நிச்சயம் சிந்திப்பார்கள்

//தனக்கு சம்பந்த பட்டவர்களுக்கு சாதக தீர்ப்பு., திருமண முரிவில் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என்று அறி பரி போன்றவைகள் நடைபெறத்தான் செய்கின்றது இதுபோன்ற நிகழ்வுகளால் சங்கங்களுக்குத் தானே இலாபம் ஏனெனில் இரண்டாம் தடவையோ அல்லது மூன்றம் தடவையோ திருமணம் செய்தால் கல்யாண வரி கிடைக்குமே !//

விவாகம் அனாலும் சரி விவாகரத்து அனாலும் சரி ,அரசியல் பலம் ,பண பலம் இருபவர்கள் இச் சங்கத்தை அணுகினால் நிச்சயம் நினைத்ததை சாதிக்கலாம்

//வருடா வருடம் இச் சங்களுக்கு குறைந்தது 100 திருமண மாவது நடக்க வாய்ப்பு இருகிண்றது இதையெல்லாம் கணக்கிட்டால் இதுநாள் வரைக்கும் கோடிக்கணக்கில் அவர்களிடம் கையிருப்புகள் அல்லது சொத்தோ இருக்க வேண்டும்,//

அதிரை மக்கள் கவனத்திற்கு

//இன்னும் எழுத நிறைய இருக்கின்றது இன்ஷா அல்லாஹ் முயற்சிக்கின்றேன்//

உங்களுடைய எழுத்துக்கள் மூலம் நிச்சயம் மக்கள் விழிப்புணர்வு அடைவார்கள்.தாங்கள் நிறைய எழுத வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

Adirai khalid said...

diary said
//முதன் முறையாக எனது வலைப்பூவுக்கு வந்தமைக்கு நன்றி//

அடிக்கடி வந்துள்ளேன் பர்வையாலனாக மட்டும்

dairy said
///ஒரு மாணவன் தான் எழுதிய பரிட்சையின் முடிவை தன் ஆசிரியர் பாராட்டும் பொழுது எப்படி பூரிப்பு அடைவானோ அப்படி நானும் பூரிப்பு அடைந்துள்ளேன் , தங்களை போன்ற மூத்த எழுத்தாளர்களின் ஊக்கம் எம்மை மிண்டும் மிண்டும் எழுத தோன்றிகிறது ///

உங்கள் வரிகள் என்னை புல்லரிக்க (ஃபுல் அடித்த அல்ல) வைத்து விட்டது ., அல்லாஹ் ஒருவனே போதுமானவன்
dairy said..
///மக்கள் விழிப்புணர்வு அடைந்தால் நிச்சயம் சிந்திப்பார்கள்//

மக்கள் (மா)க்களாகவே இருக்க ஆசைப் படுகின்றனர்
மொக்கை கட்டுரைகளுக்கும் கவிதைகலுக்கும் வாசிகாமலே பின்னூட்டமிடுகின்றனர் எப்பொழுது விழிக்க... உணர...
இதெல்லாம் சாத்தியம் படுமா?

now im going out i will more comments later also sent your email id to halidh@gmail.com

please remove Word Verification in your commentbox under comments

Ahamed irshad said...

சங்கம் செத்துப்போய் ரொம்ப நாளாயிடுச்சு... சில விஷயங்களில் மாறுபட்டாலும் உங்கள் கருத்தோடு நான் ஒத்துப்போகிறேன்..

எழுத்துப்பிழைகள் உள்ளன... அடுத்தடுத்து வரும் கட்டுரையில் அதை தவிர்க்க முயலுங்கள்.. வாழ்த்துக்கள்..

Diary said...

தங்கள் வருகைக்கு நன்றி !!! சங்கத்தின் மனசாட்சி செத்துப்போய் நாளாயிடுச்சு ஆனால் அதிரையின் மக்களின் பாரம்பரியமிக்க சமுக திருமண வாழ்கை முறையை நெறி படுத்துவதற்காக அமைக்கப்பட சங்கம் இன்று அதற்க்கு எதிராக வளர்ந்து வருவது கவலை அழிக்கிறது

Doha Friends said...

மனைவியை முதலில் சந்திக்கும் போது ஓதும் துஆ:- Recite:
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا جَبَلْتَهَا عَلَيْهِ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَّرَّ مَا جَبَلْتَهَا عَلَيْهِ

"O Allah, I seek the good in it from You and the goodness in the habit and character in her and seek refuge in You from her evil habits and character".

Note: Recite the above dua whilst holding the forehead of the bride for Barakaat (blessings). (Mishkat from Abu Dawood and Ibn Maja)


உடலுறவு கொள்ளும்போது ஓதும் துஆ:-

ஒரு கணவன் தம் மனைவியிடம் உடலுறவு கொள்ளும் போது ‘பிஸ்மில்லாஹ்’ கூறுவதும் இறைவனிடம் ஷைத்தானை விட்டும் பாதுகாப்புத் தேடுவதும் சுன்னத்தாகும். நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:

உங்களில் யாரேனும் தன் மனைவியிடம் உடல்உறவு கொள்ளும்போது, ‘பிஸ்மில்லாஹி, அல்லாஹும்ம ஜன்னிப்னஷ் ஷைத்தான் வஜன்னிபிஷ் ஷைத்தான மாரஸக்தனா’

இறைவன் திருநாமத்தால் உடலுறவு கொள்கிறேன். இறiவா! ஷைத்தானின் தீங்குகளை விட்டும் எங்களைப் பாதுகாப்பாயாக! நீ எங்களுக்கு வழங்கும்; சந்ததிகளையும் ஷைத்தானைவிட்டும் பாதுகாப்பாயாக என ஓதுவாராக.

Shameed said...

நமது ஊரில் உள்ள சங்க நிர்வாகிகளுக்கு இஸ்லாமிய சட்டங்கள் அறியாது. காலை நஷ்டா கொடுத்தல் ஒரு நியாயம் இரவு சாப்பாட்டுக்கு ஒரு நியாயமும் பிரச்னையில் சிக்கி இருக்கும் பெண்களிடம் மிரட்டி தகாத உறவு வைத்துகொள்வதும் தான் பஞ்சாயத்தின் முக்கிய வேலையாக உள்ளது இதுபோன்ற அட்டு பஞ்ச்யாதுகளை களை எடுக்க வேண்டும்