1964 ஆம் ஆண்டு அதிரையில் நடந்தது என்ன?


அதிரையின் வரலாறை அறியும்  ஆவலில் கடந்த கால நினைவுகளை எனது தாயாரிடம் கேட்டு அறிந்து கொள்ளுவது எனது வழக்கம். அந்த வகையில்  அவர்கள் ஒரு நாள் என்னிடம் கனத்த இதயத்துடன் சொன்னார்கள் தனது தந்தை ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தில் ஒரு தொழில் அதிபராக இருந்ததாகவும் ஒரு மிக பெரிய புயல் தமிழகத்தை தாக்கிய பிறகு பெரும் நஷ்டத்தை சந்தித்த அவர்கள்  என்ன செய்வது என்று தெரியாமல் தன் காலத்தை ஊரிலே கழித்தகவும் செல்வ செழிப்புடன் அதிரையில் வாழ்ந்த பல குடும்பங்கள் வறுமையை சந்திதகாவும் சொன்னார்கள் 

முழங்கால் வரை வெள்ளை சட்டை , வெள்ளை வேட்டி துருக்கியர் அணியும் தொப்பி எழுத படிக்கும் அளவுக்கு கல்வி, தமிழ் மொழியை தவிர வேறு மொழி அறியாதவர் எனது அப்பா (தாத்த) ஒரு தொழிலதிபர் அனால்  பல வசதிகள் நிறைந்த இந்த காலத்தில் மேல் படிப்புகள் எல்லாம் படித்த நான் மேலும் சுதந்திர நாட்டில் பிறந்த நான் அயல் நாட்டில் இரண்டாம் தர தொழிலாளியாக வேலை செய்ய கரணம் என்ன ? பாசம் , நேசம் , காதல்  உறவுகள் என்று அனைத்தையும் இழந்து ஒவ்வொரு பொழுதையும் தீனர்களுகாக கழிப்பதற்கு கரணம் என்ன ? என்ன படித்தாலும் அயல் நாட்டு வாய்ப்பை தவிர வேறு வாய்ப்பு எதுவும் இல்லாத நிலைமை கடலோர தமிழர்களுக்கு குறிப்பாக இஸ்லாமிய தமிழர்களுக்கு ஏற்பட காரணம்  என்ன ? நம் முன்னோர்களுக்கு கிடைத்த வாய்ப்புகள் நமக்கு ஏன் கிடைக்கவில்லை ? வாய்ப்புகளை உடைத்து எறிந்த அந்த கோர சம்பவம் என்ன என என்னிவனாக இருந்த எனக்கு சமிபத்தில் ஒரு தொலைகாட்சியில் அந்த சம்பவத்தை படம் பிடித்து காட்டினார்கள் 

1964  ஆம் ஆண்டு நடந்த அந்த சம்பவம் தமிழகத்தை மட்டும் அல்ல இந்தியாவையும் சேர்த்து உலுக்கியது அந்த கோர சம்பவம் 
தனுஸ்கோடி 
(தொடரும் )


7 comments:

தாஜுதீன் (THAJUDEEN ) said...

சகோதரர் டைரி நல்ல சஸ்பென்ஸா முடிச்சிருகீங்க, 1964 நிகழ்வு என்னவேன்பது எனக்கு தெரியும், அடுத்த பதிவு என்ன என்பதை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்.

Shameed said...

சகோதரர் டைரி நல்ல சஸ்பென்ஸா முடிச்சிருகீங்க, 1964 நிகழ்வு என்னவேன்பது எனக்கு தெரியும்,

தெரிந்த ஆல் கொஞ்சம் சும்மா இருங்கப்பா .தெரியாத ஆளுக்கு மொதல்ல நைசா மெயில் தட்டி விடுங்கோ

தாஜுதீன் (THAJUDEEN ) said...

சாஹூல் காக்கா, நம்ம அதிரை டைரியில வந்துவிடும் இன்னும் சில நாட்களில் நம்மூரை விளாசிதள்ளிய அந்த செய்தி.

Shameed said...

ஆவலா இருக்குது , சீக்கிரம் போடுங்க

Diary said...

நன்றி தாஜுதீன் மற்றும் ஷாகுல் காக்கா

உங்களுடைய ஆதரவை மட்டும் அல்ல ஆலோசனையும் எதிர்பார்கிறேன்
எங்கே உங்களுடைய ஆலோசனைகள் என்னுடைய சஸ்பென்சை உடைத்துவிடும் என்ற உயரிய நோக்கத்துடன் கருதுதிட்டமையை நான் நன்கு அறிவேன்

உங்களுடைய எதிர்பார்ப்பை முடிந்தவரை அடுத்த பதிவில் பூர்த்தி செய்வதற்கு முயற்சிக்கிறேன்

Yasir said...

ஹாலோ..டைரி...சிக்கிரம் எழுதுங்கள்...பாக்கியை...படித்துவிட்டு பல பேருக்கு சொல்ல வேண்டிய வேலை உள்ளது

Shameed said...

எங்கே ஆளை காணோம் தமிழ் செம்மொழி மாகநாட்டுக்கு போய்டியல